இப்ப பிரச்சினை இதை
எல்லாம் வாங்கிகிட்ட நாங்க இந்த பாபங்களை எங்கே கொண்டு தொலைக்கிறது? :-)
---
அது எப்படியோ
தொலையட்டும்!
நம் செயல்கள் எல்லாமே
பாபம் இல்லாம இருக்கான்னு யோசிச்சா இல்லைன்னே தோணும். பெரும்பாலான செயல்கள் பாபம்
புண்ணியம் கலந்ததாவே இருக்கும். குழந்தைக்கு வலிக்குமே, நோய் வருமேன்னு கொசுவை
கொல்லப்போனா அதுவும் பாபமாகிறது. நடந்தால் கொண்டால் எத்தனையோ ஜீவ ராசிகள் மிதி
பட்டு செத்துப்போகின்றன. காலம் கெட்டு மழை பெய்யறதே ஒரு வென்னீர் வெச்சு
குடிக்கலாம்ன்னு பாத்தா அடுப்பு ஏத்தினதிலேயும் தண்ணீரை கொதிக்க வெச்சதிலேயும்
சிலது செத்துப்போச்சு. சரி ஒண்ணுமே செய்யாம
இருப்போம்ன்னாலும் நாம் எடுக்கிற மூச்சிலே சில ஜீவராசிகள் உள்ளே போய்
செத்துப்போகுது. மூச்சு விடாமலே இருக்க முடியுமா என்ன?
ஜைனர்களின் அடிப்படை கொள்கை ஜீவ
காருண்யமா இருக்கிறதாலே அவங்க நிறைய விஷயம் பாலோ பண்ணறாங்க. ஜைன துறவிகள் வாய்
மூடி போட்டுக்கிறாங்க. (முகமூடின்னு எழுதப்போனேன், அது சரிதான்னாலும் கொஞ்சம் குழப்புமோன்னு…)
நடக்கும் போது முன்னாலே பெருக்கிக்கிட்டே போவாங்க. தண்ணீரை துணியாலே பில்டர்
செய்வாங்க.
என்ன செய்தாலும் நம்மால சில உயிர்கள் போவதை தடுக்க முடியாது.
உம். ஆனால் இதுக்காக ரொம்ப கவலைப்பட
வேண்டாம். அஹிம்சை என்கிறது சன்னியாசிகளுக்குத்தான் பரம தர்மம். குடும்ப பாரம்
சுமக்கிறவங்களுக்கு இல்லே. அவங்களால இதை முழுக்க கடைப்பிடிக்க முடியாதுன்னு
தெரிஞ்சே சாத்திரங்கள் தினசரி நடவடிக்கையாவே சில ப்ராயச்சித்தங்களை வெச்சு இருக்கு. வைச்வதேவம் என்கிற அந்த ப்ராயச்சித்தங்களை இன்னிக்கு தினசரி செய்கிறவங்களையும் காணோம்!
இப்படியாக நம் வாழ்கை முறைகள்
மாறினதிலே புண்ணியங்கள் செய்வதிலிருந்து வெகு தூரம் விலகிவிட்டோம். பாபங்களை
பெருக்கிக்கொண்டுவிட்டோம். என்னதான்
செய்யலாம்? இது சம்பந்தமான கோளாறான எண்ணங்களை நீங்களும்தான் பகிர்ந்து
கொள்ளுங்களேன்!
அடுத்த பதிவில் மீண்டும் சந்திப்போம்!
3 comments:
நம் சமையலே 'வதக்கறது, பொரிக்கறது, நறுக்கறது, வேகறது, கொதிக்கிறது' என பயமுறுத்தும் செயல்களாக அமைகிறதே!!
'காயத்ரி' சொல்லிண்டே சமைக்கணும். சாப்பிடுமுன் ஸ்வாமி 'கண்டருள' செய்யணும். கொசு, ஈ அடிக்கும்போது 'ராம, ராம' ன்னு சொல்லணும்...
மிக முக்கியமா ராத்திரி தூங்குமுன் 'காயேன வாசா' 'கர சரண க்ருதம்வா' சொல்லிட்டா பாவத்தைக் குறைச்சுக்கலாம்!!
இது என் வழி... :))
ம்ம்.......... யோசிச்சு பாத்தேன் !! இப்படி தோணறது மிஸ்டர் திவா. இதுவும் கோளாறான எண்ணம்னு பலருக்கு தோணலாம். ஆனா எனக்கு இப்படித்தான் தோணறது என்ன செய்ய??
மலம் அழுக்கு கந்தா இல்லாத இடமே இல்லைநு தோணித்து. வெளில சுத்தம்னு பாக்கறோம். நீர் ல நதிகள்ள மீன் இல்லாம உண்டா?? அது தன் கசடுகளை கழிவுகளை வெளியேத்தி தானே ஆணும்?? கொதிக்க வச்சா அது சுத்தம் ஆயிடுத்தா?? வெளில பாத்து நாம செஞ்சாலும் நமக்குள்ளேயே மலத்தையும் கழிவையும் நாம வச்சுண்டே தானே இருக்கோம், எண்ணங்களில் மலம் அது தனி!! எனக்கு இப்பல்லாம் படறது - தெரிஞ்சு இன்ட்டன்ஷனால் ஆ யாருக்கும் ஊறு விளைவிக்க வேண்டாம் .எந்த ஒரு நிகழ்வும் அதை சேர்ந்த விளைவுகளும் ஒரு அனுபவமே. தப்பு ரைட்டு பாவம் புண்யம் நு பாக்கறத விட ஒவ்வொரு செயலையும் அதன் விளைவுகளையும் அது தரும் அனுபவத்தையும் மனப்பூர்வமா நாம பாத்து செய்யனும்னு ஆத்மார்த்தமா படறது .என் செயல் இனிமையானதா, அன்பை தருகிறதா இல்லை அன்புடன் கூடியதா, அகங்காரத்துல செய்கிறோமா நு பாத்து செய்யும் போது அதீதமான ஒரு சந்தோஷம் அமைதி வரது. அதுல எதிர்பார்க்காத நன்மைகள் பலன்கள் வரது. அதிசயமா இருக்கு.. பாவம் ,புண்யம் அதோட மெரிட் , டி மெரிட்ஆராய்ந்தா சஞ்சலம் பயத்தைத்தான் உண்டாக்கறது. நரகம் எப்படி இருக்கும்னு தெரியாது. சுவர்க்கம் இப்படித்தான் இருக்கும்னு சொல்லவும் முடியல்லை. ஏன்னா அதுவும் அனுபவிச்சாதானே தெரியும்.அனுபவிச்சவா வந்து சொல்லி பாக்கல கேட்கல. எந்த கசப்பான அனுபவங்களும், தப்புன்னு
சொல்லப் படுபவையும் செஞ்ச அப்புறம் தான் எனக்கு தெரியறது> என்ன பொறுத்தவரை என் so-called தவறுகளே என் தோழன். அது கொடுத்த அனுபவம்,வளர்ச்சி,பாடம் என் வாழ்க்கையில் வேற எதுவும் சொல்லிதரல!!!
பத்து நாளைக்கு முன்னால இன்சைட் என்னன்னா நாம பண்ணற எந்த விஷயமுமே நாம பண்ணாம இருந்திருக்கவே முடியாது.ஏன்னா பிறந்ததே அதை பண்ணி தெரிஞ்சுக்கன்னு தோனுகிறது. எத்தனை நாள்தான் நான் நானு மார்தட்டிண்டு பாவி,புண்ணியன்னு சொல்லிண்டு இருப்பேன். இப்படி புகழ்ந்து இகழ்ந்துண்டே சாட்டையால அடித்துக்கொண்டே இருந்தா ஜீவனையும் உள்ள இருக்கிற சுத்த சத்துவ வஸ்துவையும் என்னிக்கும் பாக்க மாட்டேன்னு தோணித்து.
ஶ்ரீ, ஜெயஶ்ரீ, கமென்டுகள் பார்த்து சந்தோஷம். இன்னிக்கு மதியம் பார்த்தப்ப கூட கமென்ட்ஸ் கண்ணுல படலை! ப்ளாகர் கொஞ்சம் பிரச்சினை தருது. கமென்ட் சரியா
வரதில்லை.
எனிவே, இப்படி சிந்தனைகளை தூண்டறதே பதிவுகளின் நோக்கம்! அது நிறைவேறுகிறது!
நன்றி!
Post a Comment