Pages

Thursday, August 16, 2012

கோளாறான எண்ணங்கள் -5


இது சம்பந்தமான கோளாறான எண்ணங்களை நீங்களும்தான் பகிர்ந்து கொள்ளுங்களேன்!
அடுத்த பதிவில் மீண்டும் சந்திப்போம்!
--
இப்படி எழுதினேன். பலத்த மௌனம்தான் பதில்! போகட்டும்!
--
ப்ராயச்சித்தத்தில் முக்கிய விஷயம் பச்சாத் தாபம் என்று பார்த்தோம். நாம் வேண்டுமென்று செய்யாத பாபங்களுக்கு ஐயோ பாவம்(!) இப்படி ஆகிவிட்டதே என்று வருந்துவதே ஒரு வகை சின்ன ப்ராயச்சித்தமாக போய் விட்டது.
அவ்வப்போது விரதங்கள் இருப்பது இதுக்குத்தான். ப்ராயச்சித்தமாகத்தான். நம்மை நாமே வருத்திக்கொள்வது ப்ராயச்சித்தமாகிறது. காஞ்சி மஹா பெரியவரே ஒரு உதாரணமாக இருந்தார். மடத்தை சேர்ந்த ஒருவரால் ஒரு தீங்கு இழைக்கப்பட்டு விட்டது. போன இடத்தில் சூழ்நிலை காரணமாக அப்படி ஆகிவிட்டது. இதற்கு மடாதிபதி நேரடி பொறுப்பு இல்லை என்றாலும் ‘வைக்காரியஸ் ரெஸ்பான்சிபிலிடி’ என்பதான மறைமுக பொறுப்பு அவருடையதாயிற்று. இதைப்பற்றி வெளியே யாருக்கும் தெரியாது. இருந்தாலும் இவரே க்ரிமினல் பீனல்கோட் புத்தகத்தை கொண்டு வரச்சொல்லி தனக்குத் தானே தண்டனை விதித்துக்கொண்டாராம்! இவ்வளவு ஸ்ட்ரிக்ட்டாக இருப்பவர்களை இப்போதெல்லாம் பார்ப்பது அரிது.
வேத பாராயணம் செய்வது இந்த காலத்தில் எல்லோருக்கும் சாத்தியமில்லை. யாருக்கெல்லாம் காயத்ரி உபதேசிக்கப்பட்டு இருக்கிறதோ அவர்கள் தினசரி ஆயிரம் அல்லது அதற்கும் மேல் ஜபம் செய்து வருவது பாபங்களை சர்வ நிச்சயமாக தொலைக்கும்.
புராணங்களில் பலரும் கதைகளை மட்டும் படிக்கிறார்கள். சிலர் அப்படி  படித்துவிட்டு கேலி செய்து கொண்டும், இடக்காக கேள்விக்கேட்டுக் கொண்டும் திரிகிறார்கள். அவற்றில் பல இடங்களில் பல ஸ்லோகங்கள் சிவ பெருமான் முருகனுக்கு சொன்னது, பார்வதிக்கு சொன்னது என்ற ரீதியில் சொல்லப்பட்டு இருக்கின்றன. பல உபாசனைகள் சொல்லப்பட்டு இருக்கின்றன. அவற்றை கடைபிடிப்பதன் மூலம், பாராயணம் செய்வதன் மூலம் யாரும் பாபங்களை தொலைத்துக் கொள்வதுடன் பல விஷயங்களை- கடன் தொல்லை தீருவது போல - வேண்டிப்பெறலாம்.
பகவான் ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு வழியில் படியளந்து கொண்டு இருக்கிறான். வெயில் மழை தாக்க முடியாதபடி ஒரு கூரை, உடுத்திக்க கிழிசல் இல்லாமல் ஒரு துணி, பசியில்லாமல் இருக்க சாப்பாடு கிடைச்சாச்சுன்னா நம்ம அடிப்படை தேவைகள் பூர்த்தி ஆயாச்சு. இதுக்கும் மேலே நமக்கு கொடுத்து இருக்கிறதெல்லாம் போனஸ்தான்.
அதனால நம்மகிட்ட சேருகிற பணத்தை வெளியே அனுப்ப பார்க்கணும். இதன் மூலமா நம் பாபங்கள் தொலையும். பொதுவா புண்ணிய கணக்கு வேறே பாப கணக்கு வேறே “தானிக்கி தீனி சரி போயிந்தி” ன்னு ஆகாதுன்னு சொன்னாலும் இன்னொரு பக்கம் ரிஷிகள் புண்யே பாபம் அபநுததி  - புண்ணியத்தால் பாபம் விரட்டப்படுகிறது என்று சொல்லி இருக்கிறார்கள். முன்னேயே “கலிக்காக சொல்லிய ப்ராயச்சித்தங்களின் பிரதிநிதியாக சொன்னதில் ஒன்று திரவியத்தை தானமாக கொடுத்துவிடுவது. யத் கலுவாவ தப இத்யாஹுஹு யத் ஸ்வயம் ததாதீதி….. ஸ்ருதியே இதை ஒரு தபஸ் என்கிறது.” என்று பார்த்தோம். ஆகவே அவரவர் சக்திக்கு தகுந்த படி தானம் செய்வதை மேற்கொள்ளலாம்.

7 comments:

Sri said...

தினமும் தவறாமல் இந்த வலைப்பதிவை வாசிக்கும்,, சனி, ஞாயிறுகளில் கூட, ஒரு வேளை ஏதாவது பதிவு இருக்கிறதா என பார்க்கும் வாசகி நான்.

ஆனால் பதிவு செய்வது எப்போதாவது தான்... ஹி... ஹி...
தொடரட்டும் தங்கள் பணி...

திவாண்ணா said...

:-) வாழ்க, வாழ்க! ஶ்ரீ க்காக ஸ்பெஷல் பதிவு ஒண்ணு வெச்சு இருக்கிறேன். சீக்கிரத்தில் வெளி வரும்.
ஏறத்தாழ 100 ஹிட் ஒரு நாளுக்கு இருக்கு. இருந்தாலும் இன்டர் ஆக்‌ஷன் இருந்தா கொஞ்சம் நல்லா இருக்கும்ன்னு ஒரு ஆசை!

Sri said...

ஓ! நன்றிகள் பல...
காத்திருக்கிறேன் ஸ்பெஷல் பதிவைப் படிக்க... :-)

ஸாரி, முடிந்தவரையில் பதிவு செய்ய முயற்சிக்கிறேன்...

Thirumal said...

ஏறத்தாழ 100 ஹிட் ஒரு நாளுக்கு இருக்க/ இதுபோக ரீடர்ல படிக்கிறவங்க நிறைய பேரு இருக்காங்கண்ணா[என்னைய மாதிரி]..அது ஹிட்ஸ் கவுண்ட்ல வராது.

திவாண்ணா said...

:-)
நானும் பெரும்பாலும் ரீடர்லதான் படிக்கிறேன். ஏன் அதை ஸ்டாட்ஸ்ல கொண்டு வர முடியலின்னு தெரியலை!

வல்லிசிம்ஹன் said...

பணத்தைக் கொடுப்பதால் பாபம் தொலைக்கலாம் என்றால் சுலபமாகி விடுமே.
ப்ராயச்சித்தம் ரூல்ஸ் அப்படீன்னு இருந்தால் தேவலை. இந்தப் பாபத்துக்கு இந்த மாதிரி பிராஸ்சித்தம் செய்துவிடு என்று. காசி ராமேஸ்வரம் போவது போல.
100ஹிட்ஸ் ஆஆஆஆ!!!!!!!!!

திவாண்ணா said...

akkaa, பணத்தை தானமாக கொடுத்து பாபத்தை ஓரளவு தொலைக்கலாம்தான். அது பாபத்தின் தன்மையை பொருத்து இருக்கிறது. சாதாரணமாக பண விஷயத்தில் ரொம்ப கெடுபிடியாக இருக்கும் சேட்மார்கள் எத்தனை பேர் கோவிலுக்கு போய் விட்டு வெளியே வரும்போது அங்கிருக்கும் எல்லா பிச்சைகாரர்களுக்கும் பைசா போடுவதை பார்த்து இருக்கிறோம்!