Pages

Tuesday, August 7, 2012

பாபங்கள், ப்ராயச்சித்தங்கள் -11


 சரி ப்ராயச்சித்தம் செய்தாச்சு. அது சரியா இருந்ததா, பாபம் நீங்கித்தான்னு எப்படி தெரியும்?
பாபம் செய்தோம் என்று ஒரு பச்சாதாபம் இருந்தது அல்லவா? அது நீங்கி விடும். இல்லை அப்படியும் சந்தேகம் என்றால் ஒரு பிடி பச்சைபுல்லை எடுத்துக்கொண்டு ஒரு பசு மாட்டை தேடி போக வேண்டும். சற்று தூரத்திலேயே நின்று கொண்டு அதை புல்லை காட்டி கூப்பிட வேண்டும். அது கண்டு கொள்ளாமல் இருந்தால் பாபம் போகவில்லை என்று பொருள். (முதல்ல அது கட்டிப்போடாம இருக்கான்னு பாத்துக்குங்க!) நெருங்கி வந்து புல்லை வாங்கி சாப்பிட்டால் பாபம் நிவர்த்தி ஆயிற்று என்று தெரிந்து கொள்ளலாம்.

சுருக்கமாக (?) பாபங்கள் பற்றியும் ப்ராயச்சித்தங்கள் பற்றியும் பார்த்தோம். மிக விரிவாக சாத்திரங்கள் எதெல்லாம் பாபம் அவற்றுக்கு ப்ராயச்சித்தங்கள் என்னென்ன என்று விவரிக்கிறது சிரத்தை இருப்பவர்கள் அதை தேடி கண்டு பிடித்து படிக்கலாம்.

இது வரை பொறுமையாக பிடித்து வந்திருந்தால் சிலதை உள் வாங்கி இருக்கலாம்.
பாபங்கள் பலது. ஏதோ புண்யமும் செய்து இருப்பதால்தான் இந்த மனுஷ ஜன்மம் கிடைத்தது இருக்கிறது. இந்த ஜன்மத்தில்தான் நமக்கு நல்லது கெட்டது என்கிற ஆறாவது அறிவும் கொடுத்து இருக்கிறான் இறைவன். அதனால இதை வீணாக்கக்கூடாது. நாம் பாபங்களை தொலைத்து விட வேண்டும்.

சொல்லிய இருக்கிற ப்ராயச்சித்தங்கள் கடை பிடிக்க கடினமானவை. நல்ல காலமாக ரிஷிகள் கலி காலத்துக்கு தகுந்த படி இலகுவாக செய்யக்கூடிய ப்ராயச்சித்தங்களை சொல்லிய இருக்கிறார்கள்

பாபங்கள் பலது. தினசரி வாழ்கையில் நாம் பாபங்கள் செய்வதை தவிர்ப்பதும் அரிதே. கூடிய வரை தெரிந்து பாபங்களை செய்வதை தவிர்க்க வேண்டும்.

இத்துடன் தப்பி விட்டதாக யாரும் நினைக்க வேண்டாம். கோளாறான எண்ணங்கள் இதை தொடர்கின்றன!
 

2 comments:

துளசி கோபால் said...

பசுமாட்டுக்குப் பதிலா பக்கத்தாத்து பூனைன்னு வச்சுக்கலாமா?

எங்கிருந்தோ ஒன்னு வந்து, இப்போ ரெண்டாயாச்சு.

ஓடிவந்து வாங்கித்தின்னு தடவிண்டு போறது:-)

திவாண்ணா said...

வாங்க, வாங்க! நலமா?
பூனைகள் நாய்கள் மாதிரி ப்ராணிகள் நம் முந்தைய ஜன்மங்களில் நமக்கும் அவற்றுக்கும் இருக்கும் கர்ம கணக்கை தீர்த்துக்கொள்ள வந்து போகின்றன. நல்லதுதான். எங்க வீட்டுல இப்ப 7 வதொ 8 வதோ ஜெனெரேஷன்.