Pages

Friday, August 31, 2012

தினசரி பூஜை -11

 
தினசரி பூஜைக்கு இப்படி விரிவான சங்கல்பம் செய்வது கட்டாயம் இல்லயானாலும் செய்வது நல்லது. ஒன்று அது சுலபமாகும். இரண்டாவது இந்த பஞ்சாங்க தேவதைகள் அவர்களை நினைவு கூறுவதால் மகிழ்ச்சி அடைந்து அனுக்ரஹிப்பர். போனஸ்!

தினசரி பூஜைக்கு சங்கல்பத்தில் இதற்குப் பிறகு
ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் யாவத் சக்தி த்யான ஆவாஹனாதி பூஜாம் கரிஷ்யே" என்று சொல்லிவிடலாம். 'ஈஸ்வர' என்கிற சப்தம் இறைவன் என்றுதான் பொதுப்படையாக குறிப்பிடுகிறதே ஒழிய சிவனை இல்லை. அதனால் இப்படி யாரும் சங்கல்பம் செய்யலாம். சில வைணவர்கள் நாராயண ப்ரீத்யர்த்தம் என்பதுண்டு. அதுவும் தவறில்லை. குறிப்பாக பூஜை யாருக்கு செய்கிறோமோ அந்த தேவதையின் பெயரைச்சொல்லியே கூட சங்கல்பம் செய்யலாம்.
விசேஷ பூஜைகள் செய்யும் நாட்களில்தான் 'வீர்ய விஜய ஆயுராரோக்கிய...' என்று விஸ்தாரமாக சங்கல்பம் போகும். சந்தோஷமடையும் இறைவன் தானே நமக்கு வேண்டியதை அருளுவான் இல்லையா? ஆகவே ... ப்ரீத்யர்த்தம் என்று சொல்வதே கூட போதுமானது.
சரி. சங்கல்பம் சொல்லி முடித்து மங்களாக்ஷதையை கீழே தட்டில் போட்டுவிட்டு. நீரை தொட்டுக்கொள்ளலாம்.
பூஜை செய்யும் இடத்தை ஈரத்துணியாலோ நீர் விட்டோ சுத்தம் செய்ய வேண்டும். அவ்விடத்தில் இரட்டை இழை கோலம் போட வேண்டும். சிம்பிள் சதுரம் வட்டம் போதுமானது. ஒற்றை இழையில் கோலம் போடுவதில்லை.
மேலே செய்யப்போவதை பட்டியல் இடலாம். தயாரிப்புகளுக்கு உதவியாக இருக்கும்.
கலச பூஜை, ஆசன பூஜை, ஶங்க பூஜை, கண்ட பூஜை, ஆத்ம பூஜை, ப்ரதான பூஜை, உத்தேச த்யாகம், (நந்தி பூஜை.)
தயாரிப்புகள்: பஞ்ச பாத்திரம் - உத்தரணி; அதில் மடியாக நீர்; மங்களாக்ஷதை, சந்தனம் இப்போது அரைத்தது; பூக்கள்; ஊதுவத்தி அல்லது தூபக்காலில் தசாங்கம்; நெய் தீபம், நிவேதனம்,வெற்றிலை -பாக்கு, கற்பூரம், கற்பூர ஆரத்தி எடுக்கும் கரண்டி, ஸ்வர்ண புஷ்பம்;
பஞ்ச பாத்திரம் தாமிரத்தில் -அதாங்க காப்பர்!- இருக்கலாம். வெண்கலமும் சரி. வெள்ளியில் இருந்தால் சுத்தம் செய்வது எளிது என்பது தவிர வேறு விசேஷமில்லை. தங்கத்தில் வைத்துக்கொள்வது அவரவர் சௌகரியம்! இதெல்லாம் முன் கூட்டியே இருக்கிறதா என்று சோதிப்பது நல்லது. இல்லாவிட்டால் "அடியே! .... எங்கே?" ன்னு கேட்க, "அதான் அங்கேயே வெச்சிருக்கே, கண்ணு தெரியலே?" ன்னு கடிஞ்சுக்கிற பிரச்சினை எல்லாம் வராம இருக்கும். நிம்மதியா பூஜைக்கு உட்கார்ந்தவருக்கு கோபம் வரா மாதிரி நிலை வரக்கூடாது!
 
மடியாக நீர் கிடைப்பது அறிதாகி வருகிறது. ப்ரெபரன்ஸ் என்னன்னு தெரிஞ்சுக்கலாம். அப்புறம் அதில் எது கிடைக்கும் என்ற யதார்த்த நிலையை ஒட்டி பயன்படுத்தலாம்.
ஆறு, நதம், ஓடை, வாய்க்கால், ஏரி, குளம், கிணறு.

அறிவியல் படியே 200 மீட்டர் நீர் ஓடிவிட்டால் இயற்கையாக ஆக்ஸிடேஷனில் நீர் சுத்தமாகிவிடுகிறது. ஆகவே இதுவே மிகச்சிறப்பானது. ஆற்று நீர் கிடைக்காத பக்ஷத்தில் பட்டியலை பார்த்து கிடைக்கும் நீரை சேகரம் செய்து கொள்க. இது எல்லாமே இல்லை, ஓவர்ஹெட் டாங்க் தண்ணிதான் கிடைக்கும் என்பவர்கள்... ம்ம்ம் என்ன பண்ணுவது? குறைந்த பக்ஷம் அப்படி தண்ணீர் மோட்டார் மூலம் ஏற்றும்போது தனி லைனில் ப்ரெஷாக தண்ணீர் பிடிக்க முடியுமா பாருங்கள்

 மேல்நிலை தொட்டி அடிக்கடி சுத்தம் செய்யாவிட்டால் என்ன நடக்கும்? பழைய தண்ணீரையேத்தான் திருப்பி திருப்பி பயன்படுத்துகிறோம்! நீர் பழையதானால் அதில் பாக்டீரியா வளரும். நீர் மட்டம் குறையும் போது நீரை மீண்டும் ஏற்றும்போது அது டைல்யூட் ஆகும். அவ்வளவே. இருக்கும் பாக்டீரியா இன்னும் வளரும். தொட்டியை காலி செய்து காய விடும் வரையோ க்ளோரின் சேர்த்தாலோதான் இது பாக்டீரியா இல்லாமல் போகும். கிணறு மட்டும் என்ன வாழுதுன்னா...... அதன் பரப்பளவு அதிகம். கிணற்றின் மேல் மட்ட நீர் காற்றுக்கு எக்ஸ்போஸ் ஆகி சுத்தமாகும். இதைத்தான் நாம் எடுக்கிறோம். தொட்டி தண்ணீரோ கீழே இருப்பதுதான் குழாயில் வருகிறது!

அக்ஷதை, சந்தனம் குறித்து பார்த்துவிட்டோம். பூக்கள் முடிந்த வரை அப்போது பறித்ததாக இருக்க வேண்டும். வாசனையுள்ள பூக்களே அர்ச்சனை செய்ய ஏற்றவை
 
சமீபத்தில் ஒரு பெரியவருடன் வாக்கிங் போனேன். அவர் நடை பயிற்சியுடன் பூக்களை பறிப்பதையும் செய்கிறார்! வழியில் பல விஷயங்களை சொல்லிக்கொண்டு போனார்.....
Post a Comment