சாதாரணமாக சூரியன் என்றால் என்ன என்று புரிந்து கொள்கிறீர்கள்?
அப்படிச்சொன்னால் இது அனாவசியம்தான்.
ஆனால் உண்மையில் என் கேள்வி உபாசிக்கப்படும்
சூரியன் யார் என்பதே!
----
----
சாதாரணமாக சூரியன் என்றால் என்ன என்று புரிந்து கொள்கிறீர்கள்?
வானத்தில் பிரகாசமாக தோன்றும் மண்டலத்தையே!
அப்படியானால் அந்த பிரகாசமான மண்டலமே உபாசிக்கப்படுகிறது.
ஆனால் அறிவியலின் படி அது எப்போதும் தீவிரமாக எரிந்து
கொண்டு இருக்கும் இயக்கமில்லாத (அசேதன) வஸ்து என்றல்லவா சொல்லப்படுகிறது? ஆறறிவுள்ள நம்மால் வணங்கப்படுவதற்கு அதற்கு ஒரு தகுதியும் இல்லையே!
அதனால் நம் வேண்டுகோள்களை கேட்கவும் இயலாது, அதற்கு
விடை தரவும் இயலாது. நம் முன்னோர்கள் அப்படி ஒரு எரியும் ஜடப்பொருளை
குறித்து பிரார்த்தனைகள் செய்யும் அளவு மூடர்கள் என்று நம்ப நான் தயாரில்லை.
மிகவும் உண்மையே.
அவர்கள் அப்படிப்பட்ட மூடர்கள் இல்லை.
அப்படியானால் ப்ரார்த்தனைகளை செலுத்தும் அளவுக்கு
அவர்கள் சூரியனில் எதை கண்டார்கள்?
நீங்கள் இப்போதுதான் ஜடப்பொருளை ப்ரார்த்தனை செய்வதில்
நியாயம் இல்லை என்று சொன்னீர்கள்.
ஆமாம்.
அப்படியானால் ப்ரார்த்தனை செய்யப்பட்ட வஸ்து எப்படி இருக்க
வேண்டும்?
முதலில் வெறும் ஜடப்பொருளாக இல்லாமல் புத்தியுடன்
கூடியவனாக இருக்க வேண்டும்.
இரண்டாவதாக?
நம் ப்ரார்த்தனைகளை காது கொடுத்து கேட்டு அவற்றை
நிறைவேற்றிக் கொடுக்கும் சக்தி இருக்க வேண்டும்.
உண்மைதான்.
நம் முன்னோர்கள் மூடர்களாக இல்லை; இருந்தும் சூரியனை
ஸ்துதி செய்தனர். ஆகவே அதை வெறும் எரிகின்ற ஜடப்பொருளாக அவர்கள்
கருதவில்லை, முற்றிலும் மாறுபட்ட ஒன்றாகவே கருதி இருக்க வேண்டும்.
ஆம், அவர்கள் அதற்கு இயங்கு சக்தி இருப்பதாயும், நம் ப்ரார்த்தனைகளை
கேட்கும் சக்தியும் அவற்றை நமக்கு நிறைவேற்றித் தரும் சக்தியும் உள்ளதாகவே அதை பாவித்து
இருப்பார்கள்.
நாம்,
நமக்கு என்று சொன்னீர்களே, அதற்கு இப்போது உயிருடன்
இருந்து கொண்டு கைகளால் வணங்கும் ஜீவர்களை மட்டுமில்லாமல் முந்தைய பின் வரக்கூடிய காலங்களில்
இருக்கும் பரம்பரைகளான ஜீவர்களையும் –அவர்கள் எண்ணிலடங்காது இருந்தாலும்
- சேர்க்க வேண்டுமல்லவா?
ஆம்.
அப்படியானால் சூரியன் என்று வணங்கப்படுபவரின் ஞானத்துக்கோ செயல்திறனுக்கோ தேச கால எல்லைகள் இராது
இல்லையா?
அப்படித்தான் இருக்க வேண்டும்.
ஸந்த்யையில் உபாசிக்கப்படுகிறவர் யார் என்ற உங்கள் கேள்விக்கு
பதில் கிடைத்து விட்டது. நம் ப்ரார்த்தனைகளை
கேட்டு உதவக்கூடிய, எல்லாம் அறிந்தும், எல்லாம் இயன்றதுமாக இருக்கும் ஒரு சேதன வஸ்து என்று பதில் கிடைக்கிறது.
அப்படியானால் சூரிய மண்டலத்தில் வசிக்கும் ஒரு தேவன்
என்று பொருளா?
அப்படியே.
ஸூர்ய மண்டலம் அவருக்கு வசிக்குமிடம் மட்டுமில்லை. அது அவருடைய ஸ்தூல உடலுமாகும்.
நாம் நம் தூல உடலுக்கு உயிர் தருவது போல அந்த சூரிய
தேவன் சூரிய மண்டலத்துக்கு உயிர் தருகிறாரா?
ஆம்!
அப்படியானால் அவரும் ஒரு சரீரி. அவருக்கு மட்டும் எப்படி நாம் உபாசனை செய்யும் அளவுக்கு
இவ்வளவு பெரிய புத்தியும் சக்தியும் கிடைத்து இருக்கிறது?
அவர் முந்தைய பிறவியில் அதற்கு தகுந்த கர்மாவையும் உபாசனையையும்
செய்ததால் இப்படி ஒரு நிலை கிடைத்தது இருக்கிறது.
சூரிய தேவனும் நம்மைப்போல ஒரு மனிதனாக இருந்து தன்
முயற்சியால் இந்த நிலையை அடைந்தான் என்றா சொல்கிறீர்கள்?
ஆம்
அப்படியானால் என்னைப்போல அவனும்
ஒரு ஜீவனே ஆவான். அவன் எவ்வளவுதான் உயர்ந்தவனாக இருந்தாலும் ஒரு ஜீவன் ஏன் இன்னொரு ஜீவனை வணங்க
வேண்டும்?
4 comments:
arumaiyana pathivu. aazhamaana poruL kondathum kuda. thirumba thirumba padithen.
முதல் பகுதி எடக்கு முடக்காக இருந்தாலும், இரண்டாம் பகுதி தெளிவாக இருந்தது!
வாங்க கீ அக்கா! வீட்டில் எல்லாரும் நலமா? இது இன்னும் சில பதிவுகள் போகும்.
ஹா! ஜீவா சார்! நல்லா இருக்கீங்களா? ரொம்ப நாளா பார்க்க முடியலை!
உரையாடலில் போகப்போக இன்னும் 'குழப்பமும்' அப்புறம் தெளிவும் வரும்!
Post a Comment