சூரிய தேவனும் நம்மைப்போல ஒரு மனிதனாக இருந்து தன்
முயற்சியால் இந்த நிலையை அடைந்தான் என்றா சொல்கிறீர்கள்?
ஆம்
அப்படியானால் என்னைப்போல அவனும் ஒரு ஜீவனே ஆவான். அவன் எவ்வளவுதான் உயர்ந்தவனாக இருந்தாலும் ஒரு ஜீவன்
ஏன் இன்னொரு ஜீவனை வணங்க வேண்டும்?
--------------------
உங்கள் மகனோ மாணவனோ உங்களுக்கு ஏன் வணக்கம் செலுத்த வேண்டும்? நீங்கள் ஏன் உங்கள் உயர் அதிகாரிக்கு வணக்கம் செலுத்த வேண்டும்?
நீங்கள் இருவருமே ஜீவர்கள்தானே?
ஆமாம்.
அதில் சந்தேகமேயில்லை. அவர்கள் நினைத்தால் நமக்கு
உதவி செய்யவும் அல்லது தீமை செய்யவும் சக்தி இருக்கிறது. அதனால்
அவர்களுக்கு மரியாதை காட்டுகிறோம்.
இப்படிப்பட்ட மரியாதை மிக மட்டமானது.
அப்படியே எடுத்துக்கொண்டாலும் சூரிய தேவனுக்கு நமக்கு உதவி செய்யவும்
அல்லது தீமை செய்யவும் சக்தி இருக்கிறது. அவர் இஷ்டப்பட்டால்
நமக்கு நன்மையோ தீமையோ செய்ய முடியுமாதலால் அவருக்கு மரியாதை காட்டியே தீர
வேண்டும்.
உண்மைதான்.
உங்கள் உயர் அதிகாரிகள் போல அவரும் ஜீவராக இருப்பதால் அவரிடம்
உதவி வேண்டினால் உதவி செய்வார். அவரை
உதாசீனம் செய்தாலோ வெறுத்தாலோ கெடுதலும் செய்வார். ஆகவே அவரை
உபாசித்து அவருடைய நல்லெண்ணத்தை பெறுவது உங்கள் நன்மையை உத்தேசித்தே அவசியமாகிறது.
ஆனால் என் கடமையை நான் ஒழுங்காக செய்தால் நான் என் உயர்
அதிகாரிகளுக்கு பயப்படத் தேவையில்லை.
உண்மைதான்.
அப்படி இருந்தால் என் மேலதிகாரியின் திருப்தியையோ
அதிருப்தியையோ நான் ஏன் கவனிக்க வேண்டும்?
தேவையே இல்லை.
அதே போல சாத்திரங்கள் சொல்கிறபடி நான் என் கடமைகளை செய்து
நடந்து கொண்டேனேயானால் எனக்கு மேல் அந்தஸ்து உள்ள எந்த ஜீவனின் த்ருப்தியையும்
நான் சம்பாதிக்க வேண்டிய அவசியமில்லை.
சரிதான்.
அப்படியானால் நான் ஏன் சூரியதேவன் உபாசனையை விட்டுவிடக்கூடாது?
நிச்சயமாக! ஆனால்
ஒரு விஷயம். அப்படி உபாசிக்க வேண்டும் என்பது சாத்திரங்கள்
விதித்த கடமையாக இருந்தால் விட முடியாது இல்லையா?
அதெப்படி?
2 comments:
mmmmm ennamo manasile pathiyalai. thirumba padikkanum. appurama varen. :(
eppadi parththaalum yaaraanum oru adhikarikku payappadanum enRe aakirathee!
Post a Comment