வரும்
திங்கட்கிழமை (15-10-2012) "மாளய
அமாவாசை".
தேவர்களை
ஆராதிக்க எப்படி மார்கழி
மாதம் மிகச்சிறந்ததாக
கருதப்படுகிறதோ அதே போல பித்ரு
ஆராதனத்துக்கு புரட்டாசி
மாதம் - சரியாக
சொல்லப் போனால் பாத்ரபத மாதம்
- முக்கியமானதாகும்.
பாத்ரபத
தேய்பிறை பிரதமை முதல் வளர்பிறை
பிரதமை வரை உள்ள காலம் மஹாளய
பக்ஷ புண்ய காலம். அச்சமயம்
எல்லா பித்ருக்களும் பூலோகத்துக்கு
வந்து விடுகிறார்கள்.
சாதாரணமாக
பித்ருக்கள் எதிர்பார்ப்பது
மாதம் ஒரு முறை ஆராதனம்.
நமக்கு ஒரு
நாள் போல அவர்களுக்கு ஒரு
மாதம். நாம்
இரவு தூங்கி காலை விழிப்பதுபோல
அவர்கள் தேய்பிறையில் துயின்று
அமாவசை அன்று விழிக்கிறார்கள்.
அதனால்தான்
விழித்தவருக்கு உணவு கொடுப்பது
போல அவர்களுக்கு அமாவாசை
அன்று எள்ளும் நீரும் இறைத்து
தர்பணம் செய்கிறோம்.
விதி
விலக்காக அவர்கள் மஹாளய பக்ஷம்
முழுதுமே ஆராதனம் ஏற்க தயாராக
இருக்கிறார்கள்.
தேவர்களின்
ஆராதனத்துக்கும் பித்ரு
ஆராதனத்துக்கும் பெரும்
வேறுபாடு இருக்கிறது.
தேவர்களுக்கும்
மனிதர்களுக்கும் இருக்கும்
தொடர்பு "பரஸ்பரம்
பா4வந்த:
ஶ்ரேய:
பரம்
அவாப்ஸ்யத2" என்று
ஒருவருக்கொருவர் உதவி செய்து
கொள்கிற சமாசாரம்.
தேவர்களுக்கு
ஆராதனம் செய்ய வேண்டியது ஒரு
பக்ஷத்துக்கு ஒரு முறை.
(இஷ்டி,
ஸ்தாலீபாகம்
போன்ற கர்மாக்களை சொல்கிறோம்.)
பின்னே தினசரி
பூஜை செய்ய வேண்டி இருக்கிறதே
என்றால் அது அவர்களது உண்மை
ஸ்வரூபத்தை நாம் காண முடியாமல்
மனிதர்கள் போல பாவிப்பதால்,
அவர்களுக்கும்
மனிதர்களுக்கு தினமும்
உணவளிப்பது போல தினசரி பூஜை
செய்ய வேண்டி இருக்கிறது.
தேவர்கள்
ஆராதனம் செய்தால் சந்தோஷிக்கிறார்கள்;
அனுக்ரஹம்
செய்கிறார்கள். ஆராதனம்
செய்யாதவர்கள் குறித்து
அவ்வளவு பொருட்படுத்துவது
இல்லை. கர்மா,
புண்ணியம்
செய்து தேவர்கள் ஆனதால்
அவர்களுக்கு அந்த புண்ணிய
பலத்திலேயே இருப்பு ஏற்படுகிறது.
ஆனால்
பித்ருக்கள் அப்படி இல்லை.
அவர்கள்
ஆராதனத்தை எதிர்பார்க்கிறார்கள்.
நடக்காவிட்டால்
அது குறித்து தாபம் அடைகிறார்கள்.
அவர்களது
இருப்புக்கு அது முக்கியம்.
இவர்கள்
எதிர்பார்க்கும் இதை சரிவர
செய்யாவிட்டால் அவர்களது
கோபமும் சாபமும் நம்மை
பாதிக்கின்றன. எப்படி
எனில்....
பருவுடலை
நீத்தவர் வசு, ருத்ர,
ஆதித்ய ரூபமாக
காரண சூக்ஷ்ம சரீரத்துடன்
இருக்கிறார்கள். இதை
விட்டு இவர்கள் தன் மாத்திரைகளுடன்
லயமாக வேண்டும். இந்த
தன் மாத்திரைகள்தான் பஞ்ச
பூதங்களுக்கும் தோற்றக்காரணம்;
அவற்றின்
இருப்புக்கும் குணங்களுக்கும்
அவையே காரணம். ஆகவே
பித்ருக்கள் உலகின் ஒவ்வொரு
உயிருடனும் தொடர்பில்
இருக்கிறனர். ஆகவே
இவர்களுக்கு ஏற்படும் ஒரு
சிறு சஞ்சலம் கூட நமக்கு
மிகப்பெரிய துன்பங்களை கொண்டு
வந்து சேர்த்துவிடும்.
அவை ஆத்யாத்மிக,
ஆதி தைவிக,
ஆதி பௌதிக
துன்பங்களாகக்கூட இருக்கலாம்.
இதனால்தான்
நீத்தார் கடனை சிரத்தையுடன்
செய்ய வேண்டும் என்பது.
ஶ்ரத்3த4யா
ஆசரித ஶ்ராத்3த4:
என்ற
படி அதன் பெயரே அப்படித்தான்
உருவாக்கி இருக்கிறது.
சரியான
நேரத்துக்கு செய்தல் முதற்
கொண்டு எல்லா நியமங்களும்
சரியாக கடைபிடிக்கத்தக்கவை.
தமிழிலக்கியங்களும்
"தென்
புலத்தோர்க்கு ஊட்டினரே
வீடடைவர்" என்றும்
"தேவர்,
தென்புலத்தோர்,
துறந்தவர்க்கு
அளித்த சேடம் நல் அமுதினும்
இனிதாம்" என்றும்
சொல்கின்றன.
(ஸ்ரீ
காமகோடி ப்ரதீபம் பத்திரிகை
படித்த போது தோன்றிய சில
எண்ணங்கள்..... இதிலுள்ள
சில மேற்கோள்கள் அதிலிருந்து
எடுத்தது.)
5 comments:
அருமை
following
subbu rathinam
கேட்டறியாதன கேட்டேன்!
ஏற்கெனவே படிச்சேன்.எங்கே?????????
மோகன் சார், தான்க்ஸ்!
சூரிசார் நன்றி!
முத்து சார், உங்க ப்ளாக்ல புதிரை பார்த்து யோசிக்க நேரம் இல்லை, மன்னிக்க!
கீ அக்கா, அதானே? எங்கே படிச்சீங்க?
Post a Comment