சமீபத்தில்,
பாண்டிச்சேரியில்
ஒரு ஞாயிறு அன்று நொச்சூர்
வெங்கட்ராமன் அவர்களின்
உபன்யாசம் கேட்கும் வாய்ப்பு
கிட்டியது. ஒரு
பத்து பதிவுகளுக்கு விஷயம்
தேறிவிட்டது! :-))
கேரளாவில்
ஒரு கிராமத்தில் ஒருவர்
இருந்தார். ஊர்
சுற்றிக்கொண்டு இருக்கும்
அவரை மக்கள் பைத்தியம் என்றே
அழைப்பர். ஒரு
கால் நொண்டி வேறு. ஊருக்கு
அருகில் ஒரு சிறு குன்று
உண்டு. அதன்
அடிவாரத்தில் ஒரு சிறு ஓடை.
தினசரி காலை
இந்த பைத்தியம் ஒரு பெரிய
கல்லை கஷ்டப்பட்டு உருட்ட
ஆரம்பிக்கும். தூக்க
முடியாத அளவு பெரிது.
அதனால் அதை
உருட்டி குன்றின் மேலே ஏற்றும்.
ஒரு வழியாக
குன்றின் உச்சியை அடையும்
போது மாலை ஆகிவிட்டு இருக்கும்!
உச்சியை
அடைந்த பிறகு பெருத்த சத்தத்துடன்
அதை கீழே உருட்டி விடுவார்!
அது உருண்டு
கீழே வந்து ஓடையில் பெரிய
சத்தத்துடன் விழும்!
இது
தினசரி நடந்து கொண்டு இருந்தது!
மக்கள்
இது குறித்து அவரை கேலி செய்வர்.
"ஏண்டா?
ஏன் இவ்வளவு
கஷ்டப்பட்டு அதை மேலே
உருட்டிக்கொண்டு போகிறாய்?
சரி,
அதை மேலே
கொண்டு வைத்தாலும் பரவாயில்லை.
அங்கே கொண்டு
போன பிறகு கீழே உருட்டி
விடுகிறாய்! போகட்டும்.
ஏன் திருப்பி
அடுத்த நாளும் மேலே உருட்டிக்கொண்டு
போகிறாய்? நீ
சரியான பைத்தியம்!"
அவரோ
சிரித்துக்கொண்டே இருப்பார்.
ஒரு
நாள் பொறுக்க முடியாமல்
அவருடைய அண்ணா கேட்டார்,
“ ஏன்டா
இபப்டி இருக்கிறாய்?
எல்லோரும்
சிரிக்கிறார்கள். ஏன்
இப்படி கல்லை தினசரி மேலே
கொண்டுப்போய் உருட்டி
விடுகிறாய்?”
பதில்
வந்தது: “அது
உருண்டு கீழே ஓடையில் பொத்
என்று விழும் போது சிரிப்பாக
இருக்கிறது”
“இந்த
க்ஷண நேர இன்பத்துக்கா இப்படி
செய்கிறாய்?”
“நீங்கள்
மட்டும் என்ன செய்கிறீர்கள்?
வாழ்வில்
சிறிது நேர மகிழ்ச்சிக்கு
நாள் முழுதும் பாடுபடவில்லையா?”
8 comments:
யார் பைத்தியம் :))
:-)) good question!
Sisyphus -Sisyphean task ;
Greek Mythology la உள்ள கதை மாதிரி. ஆனா ஆழ்ந்த அர்த்தங்கள் இருக்கு. பரமபத சோபனம் .நம்ப வாழ்க்கையே!
நல்ல கதை. பகிர்வுக்கு நன்றி.
:-))
நன்றி ஜெயஸ்ரீ அக்கா, கீதா அக்கா!
Very nice story
Very nice story Thanks for sharing!
welcome siva! thanks!
Post a Comment