ஜீவ கோஷ்டியில் சேராத மேலான ஒரு சக்தியாக இருக்க வேண்டும்.
சந்யையில் உபாசிப்பது அத்தகைய ஒரு சக்தி என்றே வைத்துக்
கொள்ளுங்கள். அதையே ஈஸ்வரன்
என்றும் அந்தர்யாமி, உள்ளே ஆள்பவன் என்றும் சொல்லுகிறோம்.
------
ஆளப்படுகிற பிரபஞ்சத்துடன் சம்பந்தப்படுத்தி அவரைப்பற்றி
பேசும் போதுதான் அவர் ஆள்பவர், ஈஸ்வரன்
என்றெல்லாம் சொல்ல முடியும் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன்.
ஆம், அது அப்படித்தான்.
பிரபஞ்சத்துடன் சம்பந்தப்படுத்தாமல் அவருடைய தத்துவத்தை
தெரிந்து கொள்ள முடியாது என்றிருக்க முடியாது. ஜகத்தின் சம்பந்தம் அவருக்கு வெளிப்பட்டதே ஆகும். இன்னொரு
பொருளுடன் சம்பந்தப்படாமலே அவருக்கு சுதந்திரமான சொரூப நிலை இருக்க வேண்டும்.
நீங்கள் சொல்வது சரிதான். அந்த எதையும் சாராத சுதந்திரமான சொரூபத்தையே பிரம்ஹம் என்கிறோம்.
அது அப்படியானால் ஜகத்தை சம்பந்தப்படுத்தி விவரிக்கும் ஈஸ்வர
தத்துவத்தை விட அந்த பிரம்ஹத்தை உபாசிப்பதுதானே சரியாகும்?
நீங்கள் சொல்கிறபடியேதான் அது. உண்மையில் சந்த்யையில் உபாசிக்கப்படுவது அந்த நிர்குண ப்ரம்ஹமே.
தாங்கள் சொல்வது எனக்கு அர்த்தமாகவில்லை.
முதலில் சூரிய மண்டலமே உபாஸ்யன் என்று சொன்னீர்கள். அது ஜடம் இல்லையா என்று கேட்ட பிறகு, உபாஸ்யன் சூரிய
தேவனே ஆவான் என்றீர்கள், அவரும் நம்மைப்போல ஜீவனே அல்லவா
என்று கேட்டபிறகு எல்லா சரீரங்களாகவும் இருக்கிற ஹிரண்யகர்பரே உபாஸ்யன் என்று சொன்னீர்கள்.
ஸர்வ சரீரியாகவும் இருந்தாலும் அஹம் என்பது இருப்பதால் அவரும்
சரீரிதானே என்றதற்கு ஜகத்தை நியமிக்கும் ஈஸ்வரனே உண்மையான உபாஸ்யர் என்றீர்கள்.
அவரும் பிரம்ஹத்தின் ஜகத்தை தொடர்பு கொண்ட பாகம்தானே என்று சொன்ன
போது உபாஸ்யன் பிரம்ஹமே என்கிறீர்கள்.
ஆமாம்.
இந்தனை
வாக்கியங்களையும் எப்படி ஒழுங்கு செய்வது என்று புரியவில்லை.
அதில் என்ன சிரமம்?
ஒரு உபாசனையில்
உபாசிக்கப்படுகிறவர் ஒருவர்தான் இருக்க முடியும். அது எப்படி சூரிய மண்டலம் அல்லது அதில் உள்ள தேவன் அல்லது ஹிரண்ய கர்பன்
அல்லது ஈஸ்வரனாக ஒரே நேரத்தில் இருக்க முடியும்?
அது சூரிய மண்டலம்
அல்லது அதிலுள்ள தேவன் என்ற ரீதியில் நான் சொல்லவே இல்லையே!
சூரிய மண்டலம்,
அதில் உள்ள தேவன், ஹிரண்ய கர்பன், ஈஸ்வரன் எல்லாம் சேர்ந்து என்று
சொல்கிறீர்களா?
அப்படியும் நான்
சொல்லவே இல்லையே!
No comments:
Post a Comment