Pages

Friday, October 5, 2012

ஸூர்யோபாசனை 4



இது நீ, உன் மேலதிகாரியிடம் இப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டால் அதை மீறி நடக்க முடியாது. அப்படி நடந்தால் இவனுடைய மேலதிகாரியின் அதிருப்தியுடன் அதற்கும் மேலான அதிகாரியின் அதிருப்தியும் ஏற்படும்.

உண்மைதான்.
 ------
அதே போல உங்களுக்கும் சூரிய தேவனுக்கும் மேற்பட்டதாக ஒரு சக்தி படைத்த ஒருவர் இருந்து, அவர் சூரிய தேவதையின் விஷயமாக இப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று ஆணையிட்டால் அதை உதாசீனம் செய்ய முடியாது; அதற்கு கீழ் படிய வேண்டும் அல்லது அந்த சூரிய தேவதையின் அதிருப்தியையும் அதற்கும் மேற்பட்ட அந்த சக்தியின் அதிருப்தியையும் சம்பாதித்துக் கொள்ள வேண்டும்

அதில் சந்தேகமில்லை. ஆனால் அப்படியானால் நான் சூரிய தேவன் முன் விழுந்து வணங்கினாலும் என் நோக்கம் அதற்கும் மேலானவனை திருப்தி செய்வதிலேயே இருக்கிறது.

அதனாலென்ன?

நான் சூரியனையும் விட மேலானவனாக ஒரு சக்தியை நினைத்துக்கொண்டு, உண்மையில் அவரது திருப்தியையே நோக்கமாக கொண்டு, வெளிப்பார்வைக்கு சூரியனை வணங்கினாலும் உண்மையில் நான் வணங்குவது அந்த மேலான சக்தியைத்தானே

ஆமாம்.

அப்படியிருக்க உபாசிக்கப்படுகிறவர் யார் என்றால் சூரிய தேவன் என்று சொன்னீர்களே

ஆம். அந்த மேலான சக்தியை உணராதவர்களுக்கு அதுவே சரி. உணர்ந்தவர்களுக்கு அந்த சக்தியே உபாசிக்கப்படுகிறவர். அந்த சக்திக்கு ஹிரண்ய கர்பன் என்று பெயர். அவன் சூரியனை மட்டும் அல்லாமல் எல்லா தேவதைகளிடத்தும் இருந்து கொண்டு அவர்களுக்கு இருப்பை கொடுக்கிறார். அவர் சூரிய மண்டலத்தில் மட்டுமே இருக்கிறார் என்பதில்லை. அவர் எல்லா பொருட்களிலும் இருக்கிறார். பிரபஞ்சத்தில் எல்லா பொருட்களிலும் ஆத்மாவாக இருப்பவர் அவரே. 

எனக்கு இது என் உடல் என்று ஒரு பாவனை இருப்பது போல சர்வ சரீரியான இவருக்கும் இந்த பிரபஞ்சம் என் உடல் என்று ஒரு பாவனை இருக்குமா?

இருக்கிறது.

அப்படியானால் எனக்கும் இவருக்கும் உள்ள வித்தியாசம் நான்என்பது இருக்கிறதா இல்லையா என்பதல்ல. அதன் பரிமாணத்தில் அளவில், வீச்சில், தீவிரத்தில் மட்டுமே. என்னுடைய அஹம் பாவனை கட்டுக்கு அடங்கியது. அவருடையது கட்டில்லாதது. இவ்வளவுதானே?

ஆமாம்.

அப்படியானால் நான்என்ற பாவனையே ஜீவர்களை உண்டாக்குகிறது எனில் இவரும் ஒரு ஜீவரே ஆவார்?

ஆம். அதனால்தான் இவரை பிரதமஜன் என்கிறார்கள்

அப்படியானால், இந்த உயரிய சக்தி ஜீவனேயாகிறது, என்னைப்போலவே. முன்னே சூரியதேவனைக் குறித்து சொன்ன அதே ஆட்சேபணை இவருக்கும் பொருந்துகிறது.

அப்படியானால் நீங்கள் யாரைத்தான் உபாசிக்க வேண்டும் என்கிறீர்கள்?

ஜீவ கோஷ்டியில் சேராத மேலான ஒரு சக்தியாக இருக்க வேண்டும்.

சந்யையில் உபாசிப்பது அத்தகைய ஒரு சக்தி என்றே வைத்துக் கொள்ளுங்கள். அதையே ஈஸ்வரன் என்றும் அந்தர்யாமி, உள்ளே ஆள்பவன் என்றும் சொல்லுகிறோம்.

2 comments:

sury siva said...

closely following
subbu rathna sharma

jeevagv said...

நல்லா இருந்தது, நன்றிகள்!