Pages

Saturday, October 6, 2012

கூச்சம்!



வயதான புகழ் பெற்ற ராபி.
சாகக்கிடந்தார்.
அவரது சீடர்கள் அவரைச்சுற்றி குழுமி இருந்தார்கள். அவரது மகத்தான குணங்களைப்பற்றி புகழ்ந்தார்கள்!
"சாலமனுக்கு அப்புறம் இவரைப்போல புத்திசாலி பிறக்கலை!" என்றார் ஒருவர்!
"அப்புறம் அவரோட நம்பிக்கை. ஆப்ரஹாம் க்கு சமம்!" - இன்னொருவர்!
"நிச்சயமா அவரோட பொறுமை ஜாப் மாதிரி!"
"இவரைப்போல மோசஸ்க்கு மட்டும்தான் கடவுள்கிட்ட நெருங்கி பேசற அளவு உறவு!"

ராபி காதில எல்லாம் விழுந்தது! இருந்தாலும் அவர் நெளிந்து கொண்டு இருந்தார்.
சீடர்கள் போனதும் ராபியின் மனைவி கேட்டார்.
"எல்லாரும் புகழ்ந்ததை கேட்டீங்க இல்லை?"
"ம்!"
"பின்னே ஏன் நெளிஞ்சு கொண்டு இருந்தீங்க?"

"என் அடக்கமான சுபாவம்- அதைப்பத்தி யாரும் பேசலை!"


1 comment:

Jayashree said...

Oopsy daisy!ஆனைக்கும் அடி சறுக்கிடுத்தே ! !