தமிழ் நாட்டில் மழை இல்லாமல்,
காவிரியில் இருந்து வர வேண்டிய நீரும் வராமல் எல்லோரும்
கஷ்டப்படுவது எல்லாரும் அறிந்ததே. நிலத்தடி நீரையும் பயன்படுத்த முடியாமல் மின்
வெட்டு இருக்கிறது.
அரசியல் மூலம் இதற்கு தீர்வு ஏற்பட முடியுமா என்பது சந்தேகமே.
மூன்று புயற்சின்னங்கள் உருவாகியும் 25% கூட நீர் தேவை
பூர்த்தி ஆகவில்லை, மேலும் மழை இல்லாவிட்டால் பயிர்கள் கருகிவிடும். நாம் இருக்க வேண்டிய படி இருப்பதில்லை. இயற்கையை எப்படி குறை சொல்வது?
இயற்கையையோ,
கர்நாடகத்தையோ திட்டிக்கொண்டு இராமல் நம்மால் இதற்கு என்ன செய்ய முடியும்
என்று யோசிப்பதே நல்லது. இதை குறித்து வலையில் தேடிய போது கிடைத்த சில விவரங்களை
பகிர்ந்து கொள்கிறேன். தங்களால் இயன்றதை செய்து தெரியப்படுத்தினால் மகிழ்ச்சி
அடைவேன்.
http://vaidhikasri.blogspot.in/2010/04/blog-post_2558.html
மழை பெய்விக்க பல வழிகள் இருக்கின்றன,
அக்னிஹோத்ரிகள் காரீரி இஷ்டி என்பதைச்செய்தால் மழை பெய்யும்
என்கிறது ச்ரௌதம்,
அது 40 நாள் சமாசாரம். பெருத்த செலவும் ஆகும் காரியம்.
செய்யக்கூடியவர்களும் அரிது. சாத்தியக்கூறு மிகக்குறைவே.
வேதம் கற்றவர்கள் பர்ஜன்ய சாந்தி (வருண ஜபம்) செய்தால் மழை பெய்யும் என்கிறது ஸ்ம்ருதி,
வேதம் கற்றவர்கள் பர்ஜன்ய சாந்தி (வருண ஜபம்) செய்தால் மழை பெய்யும் என்கிறது ஸ்ம்ருதி,
இதற்கு கொஞ்சம் வாய்ப்பு
இருக்கிறது. முயன்று பார்க்கலாம்.
மஹாபாரதத்தில் விராடபர்வா பாராயணம் செய்தால் மழைபெய்யும் என்கிறது புராணம்,
மஹாபாரதத்தில் விராடபர்வா பாராயணம் செய்தால் மழைபெய்யும் என்கிறது புராணம்,
வட மொழி வல்லுனர் யார்
வேணுமானாலும் செய்யலாம். முடியாவிட்டால் தமிழிலேயும் பாராயணம் செய்யலாம்.
நீர் நொச்சி ஸமித்தால் கணபதி ஹோமம் செய்தால் மழை பெய்யும் என்கிறது தந்த்ர சாஸ்திரம்,
ஒரு ராகத்தைப் பாடினால் மழை பெய்யும் என்கிறது ஸங்கீத சாஸ்த்ரம்,
அமிர்த வர்ஷணி. கீழுள்ள
சுட்டிகள் ஒன்று காட்டும் பக்கத்தில் விவரம் இருக்கிறது.
ஆலயங்களில் நந்திக்கு ஜலம் கட்டுதல் போன்றவற்றைத் தெரிவிக்கிறது ஆகம சாஸ்திரம்,
ஆழ்வார்களின் பாடல்களை பதிகங்களை பாடுவதால் மழைபெய்யும் என்கின்றன தமிழ் வேதங்கள்,
கீழே கொடுத்துள்ளேன்.
இவைகள் அனைத்துமே மழைபெய்யச்செய்யும் சக்திவாய்ந்தவை, அவரவரின் சக்திக்குத் தக்கவாறு மழைக்காக மேற்கூறியவற்றைச் செய்யலாம்,
இவை எதுவும் தெரியாதவர்கள், அவரவர் வீட்டிலோ ஆலயங்களிலோ இந்த வருஷம் உரிய காலத்தில் தேவையான அளவு மழை பெய்ய வேண்டும் என்று மனமுறுகி பகவானிடம் ப்ரார்த்தனை செய்யலாம். இதற்கு பகவான் அனுக்ரஹிக்கட்டும்.

உபதேசம் பெற்றவர்கள் மழை
வேண்டி தினசரி ஆயிரத்தெட்டு காயத்ரி ஜபம் செய்யலாம்.
வைணவர்களுக்கு:
ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்;
ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வ னுருவம்போல் மெய்கறுத்துப்
பாழியந் தோளுடைப் பத்பநாபன் கையில்
ஆழிபோல்மின்னி,
வலம்புரி போல் நின்றதிர்ந்து,
தாழாதே சார்ங்க முதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய்,
நாங்களும்
மார்கழிநீ ராட மகிழ்ந்தேலோ
ரெம்பாவாய்!
விளக்கம்:- கடல் போன்ற பெருமை படைத்த
கண்ண பெருமானே! நீ எதையும் மறைத்து வைக்காதே! கடல் நீரை முகந்து மேலே எழுந்து
செல். திருமாலின் மேனி போல உருவத்தில் கருமை கொள். எழில் நிறைந்த பத்மநாபன்
சக்கரம் போல மின்னி, வலம்புரி சங்கு போல்
முழங்கு. பெருமானின் வில்லில் இருந்து எழும் அம்பு மழை போல உலகம் வாழவும் நாங்கள்
மகிழ்ந்து மார்கழி நீராடவும் காலம் தாழ்த்தாமல் மழை பொழிவாய்!
http://tinyurl.com/cb3cy8e
http://temple.dinamalar.com/news_detail.php?id=13184
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகில்
திருப்புன்கூர் என்னும் சிவத்தலம் உள்ளது. இக்கோயிலுக்குரிய நிபந்தங்களில்
முக்கியமான குறிப்பு ஒன்று உள்ளது. மழை பெய்ய12 வேலி நிலமும்(84ஏக்கர்) மழை நிற்க 12 வேலி நிலமும் காணிக்கையாக ஒரு அடியார் இக்கோயிலுக்கு எழுதி வைத்துள்ளார்.
இத்தலம் குறித்து சுந்தரர் பாடியருளிய தேவாரத்தில் இக்குறிப்பு காணப்படுகிறது.
http://tinyurl.com/bm7voak
வையக முற்று மாமழை மறந்து
வயலில் நீரிலை மாநிலந் தருகோம்
உய்யக் கொள்கமற் றெங்களை யென்ன
ஒளிகொள் வெண்முகி லாய்ப்பரந் தெங்கும்
பெய்யு மாமழைப் பெருவெள்ளந் தவிர்த்துப்
பெயர்த்தும் பன்னிரு வேலிகொண் டருளும்
செய்கை கண்டுநின் திருவடி யடைந்தேன்
செழும்பொ ழில்திருப் புன்கூரு ளானே
என்பது அத்தேவாரப் பாடல்.
{வளவிய சோலைகளையுடைய திருப்புன்கூரில் எழுந்தருளியிருப்பவனே, இவ்வூரிலுள்ளவர், ` உலகமுழுதும் நிரம்பிய மழையின்மையால் வயலில் நீர் இல்லையாயிற்று ; மிக்க நிலங்களை உனக்குத் தருவோம் ; எங்களை உய்யக்கொள்க ` என்று வேண்ட, ஒளியைக் கொண்ட வெண்முகிலாய்ப் பரந்திருந்தவை, அந் நிலைமாறி, எங்கும் பெய்த பெருமழையால் உண்டாகிய பெரு வெள்ளத்தை நீக்கி, அதன் பொருட்டு அவர்களிடம் மீட்டும் பன்னிரு வேலி நிலத்தைப் பெற்றருளிய செயலையறிந்து வந்து, அடியேன் உன் திருவடியை அடைந்தேன் ; என்னை ஏன்றுகொண்டருள். }
மழை பெய்யவும் நிற்கவும் இங்கு சிறப்பு வழிபாடும் வழக்கில் இருக்கிறது. அதற்கு திருப்புன்கூர் பதிகம் முழுவதும் பாராயணம் செய்யுங்கள். குறைந்த பட்சம் இப்பாடலை மட்டுமாவது ஓதி வாருங்கள். மாதம் மும்மாரி பெய்து வளம் சுரக்கும்.

திருவாவடுதுறை பக்கதில் உள்ள
சாத்தனூர் என்னும் க்ஷேத்திரத்தில் ஒரு மகிமை இருக்கிறது. அதை விவரமாக இங்கே
காண்க:
http://aadalvallan.blogspot.in/2012_08_01_archive.html
கைலாசநாதர் கோயிலில் உள்ள
பிள்ளையாருக்கு ஆலங்கட்டி விநாயகர் என்ற பெயர் வந்த கதை சுவாரஸ்யமானது.மழை
இல்லாமல் கஷ்டப்படும் காலத்தில், கோமுகத்தையும்,
முன் புறத்தையும் அடைத்து விட்டுப் பிள்ளையாருக்கு அபிஷேகம் செய்வார்கள்.
பிள்ளையார் மூழ்கும் நேரத்தில் அடைப்பு உடைந்து நீர் வெளியேறிவிடும். மனம் தளராமல்
மீண்டும் அடைத்துவிட்டு, அபிஷேகத்தைத் தொடருவார்கள்.
எங்கிருந்தோ மேகங்கள் திரண்டு வந்து மழை கொட்டித் தீர்த்து விடும். சுமார் 70
ஆண்டுகளுக்கு முன் இங்கு வந்த காஞ்சி காமகோடி பெரியவர்கள், இந்த அதிசயத்தைப் பார்த்துவிட்டுப் பரவசமடைந்தார்களாம். ஆலங்கட்டி மழை
யாகப் பெய்ததால் பிள்ளையாருக்கு ஆலங்கட்டி விநாயகர் என்று பெயர் வைத்து
விடும்படி சொன்னார்களாம். அதன்படியே இன்றும் அப்பெயராலேயே,
விநாயகப் பெருமான் அழைக்கப் படுகிறார்.
மழை பொழிய ஆண்டவனை வேண்டுவோம். வேறு
வழியில்லை.