அலுவலகம் செல்லும் மனிதர் ஒருவர் இருந்தார். அவர் வாழ்கை நிம்மதியாகவே போய்க்கொண்டு இருந்தது. தினசரி குறித்த நேரத்துக்கு அலுவலகம் கிளம்புவார். சற்று தூரத்தில் இருந்தாலும் நடந்தே அலுவலகம் போவார். சரியான நேரத்துக்கு போய்விடுவார். இதே போல் பல மாதங்கள் நடந்து வந்தது.
ஒரு நாள் அலுவலகத்துக்கு போய்க்கொண்டு இருந்த போது வழியில் பேருந்து நிறுத்தத்தில் இருவர் நின்று பேசிக்கொண்டு இருந்தனர். அதில் ஒருவர் மற்றவரிடம் சொன்னார், " அதோ போகிறாரே அவர் தினசரி இதே வழியாக அலுவலகம் போகிறார். அவர் இங்கே கடந்து போகும் போது கடிகாரத்தை எட்டே முக்கால் என்று சரி செய்து வைத்துக்கொள்ளலாம். அவ்வளவு துல்லியம்!" இது நம் நண்பர் காதில் விழுந்தது. ஆஹா, இப்படி பேசிக்கொள்கிறார்கள் பார் என்று பெருமை பட்டுக்கொண்டார்.
அடுத்த நாளும் அவர்கள் இருந்தார்கள். "பார்த்தாயா, நேற்று நான் சொன்னது சரிதானே?!" என்று பேசிக்கொள்வது காதில் விழுந்தது. இப்படியே சில நாட்கள் சென்றன.
ஒரு நாள் வீட்டில் இருந்து கிளம்ப 5 தாமதமாகிவிட்டது. ஐயோ தாமதமாகிவிட்டதே என்ற பதட்டம் தொற்றிக்கொண்டது. கவலையுடன் அவசர அவசரமாக ஓட்டமும் நடையுமாக எட்டே முக்காலுக்கு பேருந்து நிறுத்தத்தை கடந்த பின்னரே பதட்டம் தணிந்தது! நாளடைவில் நேரத்தை பார்ப்பதும் தாமதமாகிவிடுமோ என்று கவலைப்படுவது வழக்கமாகிப்போனது. சீக்கிரத்தில் இது ஒரு அப்ஸஷன் ஆகி ரத்த அழுத்த நோய் வந்து வைத்தியரிடம் போக வேண்டி இருந்தது!
No comments:
Post a Comment