Pages

Friday, November 9, 2012

சுக சாதனம் - 3

 

ஸ்வாமிகள்: அப்படியானால் நாம் நமக்கு சாதகமாக இருப்பவவைகளை தூக்கி போட்டு விடாமல் உண்மையான சந்தோஷத்துக்கு வழி என்ன என்று பார்த்து அதை பின்பற்ற வேண்டும்.

ஊர்தலைவர்: அதில் சந்தேகமில்லை. ஆனால் அந்த வழி எது?

அதைத்தான் இப்போது பார்க்க வேண்டும். அதே தர்க்கத்தின் மூலம் முன்னோர்கள் சுகமாக இருந்த போது இப்போது இல்லாத என்ன இருந்தது, இப்போது என்ன இல்லை என்று பார்க்க வேண்டும்.

நிச்சயமாக! என்ன அது?

நீங்களே கொஞ்சம் யோசித்து பாருங்கள். அவர்கள் தினசரி வைதீக கர்மாக்களை செய்து கொண்டும் தர்ம சாஸ்திரத்தில் கூறியதை கொஞ்சம் கூட ஒதுக்காமல் கடைபிடித்துக்கொண்டும் இருந்தார்கள் இல்லையா?

நிச்சயமாக அவர்கள் அப்படித்தான் செய்தார்கள்.

இப்போது நீங்கள் அவற்றை உதாசீனம் செய்கிறீர்கள் இல்லையா?

ஆமாம் என்று ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.

அவர்கள் ஆசாரத்துடன் இருந்துகொண்டு சத்தியம் முதலானவற்றை பெரிதும் மதித்து வந்தார்கள். நீங்கள் அவ்வளவு ஆசாரத்துடன் இருப்பதாகவோ ஆத்ம குணங்களை மதிப்பதாகவோ சொல்ல முடியுமா?

முடியாதுதான்.

அவர்கள் ஏன் கர்மாக்களை நன்கு கடைப்பிடித்தனர்? நீங்கள் ஏன் அப்படி செய்யவில்லை?

இது காலத்தின் தோஷம் என்றுதான் சொல்ல வேண்டும்.

இது வெறும் நொண்டி சாக்கு; எதையும் விளக்கவில்லை. உங்களது முன்னோர்களுக்கு இருந்த நம்பிக்கை இப்போது உங்களுக்கு இல்லை என்றே சொல்ல வேண்டும்.

அதுதான் உண்மை.

ஆகவே மக்கள் நம்பிக்கைகளை கொண்டு அவற்றின்படி நடந்து வந்தபோது சுகமாக இருந்தார்கள் என்றும் நம்பிக்கைகளை கைவிட்டுவிட்டு தம் கடமைகளை உதாசீனம் செய்து மறந்தபோது சுகமாக இல்லை என்றும் புலப்படுகிறது.

ஆமாம்.

சிரத்தையும் தர்மமும் இருக்கும்போதெல்லாம் சுகம் இருந்து வந்திருக்கிறது. சுகமில்லாத போதெல்லாம் இவை இரண்டும் இல்லாமல் இருந்திருக்கிறது. ஆகவே இவையே சுகத்துக்கான சாதனங்கள் என்றாகிறது. அவற்றை நீங்கள் மீண்டும் கைக்கொண்டால் சுகம் தானாக கிடைத்துவிடும்.

ஆனால் இப்போதும் சிலர் நீங்கள் சொல்கிற படி சிரத்தையுடனும் தர்மத்தை கடைபிடித்துக்கொண்டும் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் ஒன்றும் எங்களை விட சுகமாக இருப்பதாக தெரியவில்லையே?

No comments: