Pages

Friday, November 2, 2012

கடவுளின் உபயோகம் - 3

 
மாணவர்: விஞ்ஞானிகள் பருப்பொருளாலான பௌதிக பிரபஞ்சத்தை மட்டுமே ஆராய்கிறார்கள்.

ஸ்வாமிகள்: ஆனால் சிலராவது இதைப்பற்றி யோசித்து இருப்பார்களே?

ஆமாம், அது போல சிலர் உண்டு. ஆனால் அவர்கள் நம்முள் இருக்கும் புத்தி அம்சத்துக்கு ஒரு மூல காரணத்தை கற்பித்து இருப்பதாக தோன்றவில்லை. அவர்கள் ஒன்று அத்தகைய விஷயங்கள் நம் உடல் இல்லாமல் இருக்காது, உடலின் ஒரு அம்சமே என்றோ அல்லது அவை அனாதியானவை, நிரந்தரமானவை, இன்னொரு காரணத்தை சாராதவை என்றோ சொல்கிறார்கள்.

அப்படியானால் அவர்கள் ஏன் உலகத்துக்கும் ஒரு தோற்றம் கிடையாது, அதனால் ஒரு காரணத்தை சொல்ல முடியாது என்று கொள்ளவில்லை?

உலகின் பல் வேறான தன்மைக்கு ஒரு சமாதானம் சொல்ல வேண்டி இருக்கிறது.

அதே போலத்தானே ஜீவர்களிடம் உள்ள வேற்றுமையும்?

வெளிப்படையான அம்சங்களை தள்ளிவிட்டு பார்த்தால் ஒரு ஜீவன் இன்னொரு ஜீவனிடமிருந்து மிகவும் வேறானது என்று சொல்ல இடமில்லை.

அதே போலத்தான் பௌதிக பொருளும். வெளி விஷயங்களை தள்ளிவிட்டுப் பார்த்தால் ஒரு அணு இன்னொரு அணுவிலிருந்து வேறாக இல்லை. உண்மையில் நீங்கள் எல்லா அணுக்களுக்கும் கூட ஒரு வேறுபாடில்லாத மூல சக்தியே காரணம் என்று சொன்னீர்கள்!

ஆமாம்.

நான் சொல்ல வருவது என்னவென்றால், ஏன் நீங்கள் ஒரே மாதிரி அதே காரணங்களுக்காக கணக்கற்ற ஜீவன்களுக்கு ஒரே ஒரு காரணமாக ஒரு ஆதி சேதனமான வஸ்துவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்பதே.

செய்யலாம்தான்.

அப்படியானால் விஞ்ஞானிகளின் விசாரணை கிரமத்திலேயே விசாரிக்கும்போது பௌதிக பிரபஞ்சத்துக்கு மூல காரணமாக ஒரு சக்தியையும் ஜீவ பிரபஞ்சத்துக்கு காரணமாக ஒரு பேரறிவுள்ள வஸ்துவும் உள்ளதாக ஏற்படுகிறது. அத்தகைய மூல காரணங்களுக்கு எல்லையற்ற விதமாக வெளிப்பாடும் உண்டு என்றும் ஆகிறது.

சந்தேகமில்லாமல் அப்படித்தான்.

இப்படி இருக்க ஏன் இரண்டு மூல காரணங்கள் இருக்க வேண்டும்? ஒரே ஒரு அறிவுடன் கூடிய சக்தியோ அல்லது சக்தியுடன் கூடிய அறிவோ இருப்பதாக சொல்லிவிடலாம்.

நிச்சயமாக!

அதைத்தான் எங்கள் தத்துவத்தில் நாங்கள் சொல்லுகிறோம். இந்த மூல காரணம் பேரறிவுடன் கூடிய சக்தி என்று சொல்லும் போது அதை சக்தி என்றும், சக்தியோடு கூடிய பேரறிவு என்று சொல்லும் போது சித் என்றும் சொல்லுகிறோம்.

ஓஹோ, அப்படியா!

ஆனால் இந்த சித்தாந்தத்திலும் சக்தியும் பேரறிவும் நன்கு கலந்து இருந்தாலும் அவை தனித்தனியாகவே தோன்றுகின்றன.

ஆமாம்.

நம் சித்தாந்தத்தை இன்னும் எளிமையாக்கலாம். இவற்றுக்கு ஒரு மூல காரணத்தை சொல்ல முடிந்தால். நாம் பார்க்கும் பார்வையை ஒட்டி, பௌதிக பிரபஞ்சத்துக்கு சக்தியாகவும் ஜீவ பிரபஞ்சத்துக்கு பேரறிவாகவும் இருக்கும் ஒரே விஷயமாக. அதாவது மூல காரணத்தை வேறுபடாத பேரறிவான சக்தியாக சொல்லலாம். அதை பிரம்ஹன் என்கிறோம். சக்தியும் பேரறிவும் ஒரே வஸ்துவின் அம்சங்கள். குணங்களற்று அது இருப்பதால் அது 'இருக்கிறது' என்று மட்டுமே சொல்ல முடிகிறது. அதனால் சில சமயம் அதற்கு இன்னும் எளிதாக இருப்பு - 'சத்' என்று பெயரிட்டு இருக்கிறோம்.

ஆனால் இதெல்லாம் வெறும் கற்பனைதானே?

அப்படியேத்தான் இருக்கட்டும்! இதையே சத்தியம் என்று முழங்குகிற வேதங்களின் பிரமாணத்தை ஒதுக்கிவிட்டு பார்த்தால் கற்பனைதான். அதனாலென்ன? அதனால் யாருக்கும் எந்த கெடுதலும் இல்லை.

ஆனால் அதற்காக இது குறித்து நாம் புத்தி சக்தியை செலவழிப்பதன் அவசியம் என்ன?

மற்ற விஷயங்களை குறித்து அப்படி செலவழிப்பதைவிட இது பரவாயில்லை. மேலும் ஒரு பெரிய அனுகூலமும் இருக்கிறது.

அதென்ன?

No comments: