மாஸ்டர் தெருவில் நடந்து போய்க்கொண்டு இருந்தார். ஒரு வீட்டிலிருந்து ஒரு மனிதன் வெகு வேகமாக வெளியே ஓடி வந்தான். இருவரும் மோதிக்கொண்டனர். கீழே விழுந்து சுதாரித்து மெதுவாக எழுந்தனர். அந்த மனிதன் காச் மூச் என்று கத்தி மாஸ்டரை கன்னா பின்னா என்று திட்ட ஆரம்பித்தான்.
மாஸ்டர்
அமைதியாக தலை சாய்த்து வணங்கினார். பின் சொன்னார்:”நண்பா நாம் மோதிக்கொண்டதில் இருவரில் யார் தவறு செய்தோம் என்று
எனக்கு தெரியவில்லை. ஆனால் அதை நிர்ணயிக்க உங்களுடன் வாக்குவாதம்
செய்யப்போவதில்லை. ஒரு வேளை நான் தவறு செய்திருந்தால் மன்னித்து
விடு. ஒரு வேளை தவறு உனதானால் பரவாயில்லை; மன்னித்துவிட்டேன்!”
No comments:
Post a Comment