மாஸ்டரின் பள்ளிகூடத்தில் அவர் கூட படித்த ஒருவர் எப்போதும் மாஸ்டரை துன்புறுத்திக்கொண்டே இருந்தார். இப்போது வெகு காலத்துக்குப்பின் வயதான பிறகு மாஸ்டரின் துறவிக்கூடத்தில் சேர வந்தார். தான் முன்னே பள்ளிப்பருவத்தில் அவரை துன்புறுத்தியதை நினைவில் கொண்டு எப்படி நடத்தப்படுவோமோ என்று தயக்கம் இருந்தது,. மாஸ்டரோ அவரை அன்புடன் வரவேற்றார்.
சில
நாட்கள் சென்றன. மாஸ்டரோ
தான் துன்புறுத்தப்பட்டதைப்பற்றி
ஒரு முறை கூட பேச்சை எடுக்கவில்லை.
மிக்க
தயக்கத்துடன் ‘நண்பர்’ அது
குறித்து பேச்சை துவக்கினார்.
பள்ளிப்பருவத்தில் நான் உங்களை துன்புறுத்தியது
எல்லாம் நினைவில் இல்லையா?”
“ஓ!
அதை எல்லாம்
மறந்துவிட்டது மிக நன்றாக நினைவு
இருக்கிறது!”
No comments:
Post a Comment