பாசம் பார்வையை மாற்றுகிறது என்பார் மாஸ்டர்.
அவரது சீடர்களுக்கு இது குறித்து
அருமையான உதாரணம் மாஸ்டர் ஒரு பெண்மணியுடன் உரையாடிய போது கிடைத்தது.
“உங்கள் பெண் எப்படி இருக்கிறார்?”
ஆஹா! என் செல்லக்குழந்தை … அவளுடைய கணவன் அவளை
அப்படி பார்த்துக்கொள்கிறான். கார்
வாங்கி கொடுத்திருக்கிறான். நிறைய
நகைகள், உடைகள்… வீடு
நிறைய எல்லாவற்றுக்கும் வேலையாட்கள். அவளுக்கு படுக்கையிலேயே காலை உணவை கொண்டு வந்து கொடுக்கிறான்.
மதியம் வரை அவள்
எழுந்திருப்பதில்லை. என்ன
ஒரு ஆதர்ச கணவன்!”
”ஓஹோ! அப்படியா? ஆமாம் உங்கள் மகன் எப்படி இருக்கிறார்?”
No comments:
Post a Comment