தற்கொலை தாக்குதலில் உயிரிழந்த ஒருவனைப்பற்றி மடாலயத்தில்
பேச்சு எழுந்தது.
யாருமே அவன் செயலை ஆதரிக்கவில்லை ஆனால் சிலர் அவனுக்கு
அசாத்திய தைரியம்
இருந்திருக்க வேண்டும் என்றனர்.
"தைரியமா?” என்றார் மாஸ்டர்.
"ம்ம்ம் அவன் நம்பியதை செய்ய
அவனுக்கு தைரியம் இருந்ததல்லவா?” என்றனர்.
“அது வெறித்தனம். நம்பிக்கை சார்ந்த தைரியம் என்பது இன்னும் ஆழமானது. அது
சுய சோதனை செய்து தன் நம்பிக்கை உண்மைக்கு புறம்பாக இருந்தால் தன் பற்றுக்கோள்களை நீக்குவது.”
No comments:
Post a Comment