மடாலய
நூலகத்தில் பல விதமான
புத்தகங்களையும் மாஸ்டர்
வங்கி வைத்து இருந்தார்.
அரசியல்,
கட்டுமானக்கலை,
தத்துவம்,
கவிதை,
வேளாண்மை,
வரலாறு,
அறிவியல்,
மனோதத்துவம்,
கலை மற்றும்
அவர் அடிக்கடி பயன்படுத்திய
…. புனைவு!
அவர்
அடிக்கடி சொல்லுவது “யோசி
யோசி யோசி… யோசிக்காதவங்ககிட்டேந்து
மக்களை கடவுள்தான் காப்பாத்தணும்!
ஒரே
ஒரு புத்தகத்தை மட்டும்
படித்துவிட்டு அதை மட்டுமே
பின்பற்றும் குறுகிய
மனசுக்குத்தான் அவர் மிகவும்
பயப்படுவதாக சொல்லுவார்.
இது
அவருடைய சீடர்களுக்கு குழப்பத்தை
ஏற்படுத்தியது. அவர்
சிலாகிப்பதோ யோசிக்காமல்
உணர்வது; கோட்பாடு
இல்லாத விழிப்புணர்வு!
இவையே அவரது
முக்கிய உபதேசங்கள்.
இந்த
முரண்பாடு பற்றி ஒரு சீடன்
நேரடியாகவே கேட்டுவிட்டான்,
பூடகமான
பதில் வந்தது : “முள்ளை
முள்ளால்தானே எடுக்க வேண்டும்?”
No comments:
Post a Comment