Pages

Friday, August 5, 2016

பிரார்த்தனை - 2





ரெண்டாவதா கேட்கிறது வினாதை³ன்யேன ஜீவனம். அதாவது வறுமை இல்லாமல் வாழ்க்கை. கவனிக்கணும்; நிறைய பணம் வேணும்ன்னு கேட்கலை. வறுமை இல்லாம இருக்கணும். போகிற வழியை கேட்டாச்சு; இப்ப இருக்கிற முறையை கேட்டுக்கறோம்.
அது சரி, 'வறுமை இல்லாமல் வாழ்க்கை' என்கிறதை டிஃபைன் பண்ணுப்பான்னா…
ஒரு வேளைக்காவது வயிறு நிறைய சாப்பாடு, தண்ணி கிடைக்கறதா? ரைட்டு.
கிழியாத டீசண்டான உடை இருக்கா? ரைட்டு.
தலைக்கு மேலே ஒரு கூரை இருக்கா? ரைட்டு. அதுக்கு மேலே எல்லாம் லக்ஷுரிதான் என்கிறார் என் வழிகாட்டி!
ஏன்யா இதுக்கு மேலே கொஞ்சமே கொஞ்சம் வேணும்ன்னு நினைக்கறது தப்பான்னா..
ஆமா. அதுல பிரச்சினை இருக்கு. எது எல்லை?
நடந்து போறவன் சைக்கிள் வேணும்ன்னு நினைக்கிறான். சைக்கிள் வெச்சு இருக்கிறவன் ஸ்கூட்டரோ மோபெட்டோ வேணும்ன்னு நினைக்கறான். ஸ்கூட்டர் வெச்சு இருக்கறவன் மோட்டார் சைக்கிளுக்கு ஆசை படறான். அதுவும் இருக்கறவனுக்கு ஒரு நானோ காராவது இருக்ககூடாதான்னு தோணறது! இப்படி ஆசைக்கு ஒரு எல்லையே கிடையாது. அவரவர் இருக்கிற ஸ்திதியிலேந்து இன்னும் அதிக வசதி வேணும்ன்னுதான் நினைக்கறாங்க! போதும்பா ந்னு யாரும் நினைக்கறாங்க
ஏன் வறுமை வேணாம்ந்னு சொல்றார்? பசி வந்திட பத்தும் பறந்து போம் என்கிற மாதிரி பசிக்கொடுமை அதிகமானா தர்மம் பிழற்ந்துவிடுவோம். பசி அதிகமானா திருடியாவது சாப்பிடத்தோணும். அதுக்கு அடி தடில கூட இறங்கத்தோணலாம். இப்படியே போனா நம்ம கதி அதோகதிதான்! கொடியது கொடியது வறுமை கொடியது. வெறும் வயத்துல பிலாசபி பேச முடியாதும்பாங்க. எல்லாம் நல்லதா நடந்துகிட்டு இருக்கறப்ப நல்லவனா நாமும் இருக்கறது பலருக்கும் சுலபமே. லோகத்தோட போக்கு தனக்கு எதிரா போறப்பத்தான் நம்மோட நிஜமான தைரியம் பலம் எல்லாம் தெரியவரும்
அதனால ப்ரார்த்தனை செய்யறப்ப ஏழ்மை இல்லாம வைப்பான்னு கேட்டுக்கலாம். அது போதும்.

கடைசியா கேட்கிறது
தே³ஹி மே க்ருபயா ஶம்போ⁴த்வயி ப⁴க்திம்ʼஅசஞ்சலாம்

ப்ரார்த்தனை எழுதினவருக்கு கொஞ்சம் பயம் வந்துடுத்து! இதென்னடா இது வேணும் அது வேணும்ன்னு கேட்க ஆரம்பிச்சுட்டோம்! இப்படி போய்க்கொண்டு இருந்தா ஆசை பாட்டுக்கு வளந்துடுமே! பயந்துபோய் உடனே பகவான்கிட்ட சரண் அடைஞ்சுடறார். கருணை கூர்ந்து உன்கிட்ட அசையாத பக்தியை கொடுப்பா!
அதென்ன அசையாத பக்தி?
சிலரை பாத்து இருக்கலாம். ஏதோ ஒரு வழில சாமி கும்பிட்டுகிட்டு இருப்பாங்க. அப்ப ஒத்தர் வந்து இந்த கோவிலுக்கு போனேனா? அங்க இந்த சாமியார் இருந்தார். அவர் சொல்லறது அப்படியே பலிக்குது! அவர் ஆசீர்வாதம் பண்ணா அப்படியே எங்கேயோ போயிடுவோம்! மனசு தடுமாறுது. சாமி பூஜையை எல்லாம் அப்படியே மூட்டை கட்டிட்டு கிளம்பிடுவாங்க! அவ்வளோதான் அவங்களோட இறை நம்பிக்கை!
கொஞ்ச நாள்ளே அதுவும் ஏமாத்தமா போயிடும். அப்ப ஒத்தர் வந்து இந்த ஊர்ல இருக்கிற குளத்துல குளிச்சா குபேரனாகிடலாம்பார்! மனசு அதுக்கும் ஆசைப்படும். ஏண்டா இவர் குபேரனாகலைன்னு கேட்கத்தோணாது. பணத்துக்கு ஆசைப்பட்டு அங்கேயும் போவாங்க.
இதான் நிலையில்லாத சஞ்சலமான மனசு!
இப்படி அலையறதுலேந்தும் என்னை காப்பாத்துப்பா! உன்னை விட்டுட்டு எங்கேயும் போக நா ரெடி இல்லே. என் மனசு உன்கிட்டே மட்டுமே இருக்கட்டும். ஆசை பட்டுண்டு வேற எங்கேயும் போக வேணாம்!

ஸோ சிம்பிள் பிரார்த்தனை. இது போதும். அதுக்கு மேலே அவன் என்ன கொடுத்தாலும் அதை பிரசாதமா நினைச்சுண்டு அனுபவிச்சுட்டு போயிடுவோம். கடை தேற அதான் வழி!

No comments: