தேடலில்
இருந்த ஒருவர் ஒரு சீடரை அணுகி
மனித வாழ்வின் பொருள் என்ன
என்று கேட்டார்.
சீடர்
மாஸ்டரின் எழுத்துக்களை
கொஞ்சம் பார்த்துவிட்டு
மிகுந்த நம்பிக்கையுடன்
"கடவுளின்
களிப்பின் வெளிப்பாடே மனிதன்
வாழ்க்கை" என்று
கூறினார்.
இதே
கேள்வியை மாஸ்டரிடம் கேட்ட
போது அவர் சொன்னார் :”தெரியவில்லையே!”
தேடுகிறவர்
தனக்கு தெரியவில்லை என்றுதான்
கேட்கிறார். அதுநேர்மை.
சீடர்
தெரியும் என்று சொல்கிறார.
அது கடன்
வாங்கிய அறிவின் அறியாமை.
மாஸ்டர்
தெரியவில்லை என்கிறார்.
அது அகநிலை
உணர்வுபெற்றவர் அறிய முடியாததை
அறியமுடியாது என அறிந்ததின்
வெளிப்பாடு.
No comments:
Post a Comment