Pages

Thursday, January 6, 2011

எல்லா ப்ராணிகளின் சப்தம் குறித்த ஞானம்...



शब्दार्थप्रत्ययानामितरेतराध्यासात्संकरस्तत्प्रविभागसंयमात्सर्वभूतरूतज्ञानम् ।।17।।
ஶப்³தா³ர்த²ப்ரத்யயாநாமிதரேதராத்⁴யாஸாத்ஸம்°கரஸ்தத்ப்ரவிபா⁴க³ஸம்°யமாத்ஸர்வபூ⁴தரூதஜ்ஞாநம் || 17||

ஶப்³த³= சப்த; அர்த² = பொருள்; ப்ரத்யயாநாம் = சப்தம், அர்த்தம் இவற்றால் புத்தியில் ஏற்படும் விருத்தி; இதரேதர அத்⁴யாஸாத் ஸம்°கர = இரண்டாலும் ஏற்படும் குழப்பம்; தத் ப்ரவிபா⁴க³ =இந்த மூன்றும் தனித்தனி என அறிந்து; ஸம்°யமாத் =ஸம்யமம் செய்ய; ஸர்வபூ⁴த ரூத ஜ்ஞாநம் = எல்லா ப்ராணிகளின் சப்தம் குறித்த ஞானம் (ஏற்படுகிறது).
பசுவை கொண்டு வா என்ற சொற்களை கேட்பதாக வைத்துக்கொள்வோம். பசு என்று கேட்டதும் அந்த சப்தம் என்ன? அர்த்தம் என்ன? ஞானம் என்ன என்று கேட்டால் பசு என்பதே பதிலாகும். ஆனால் பசு என்பது ஒரு சப்தம் மட்டுமே: அதை கேட்டதும் உண்டாவது இன்ன பொருள் என்பதும் கற்பிக்கப்பட்டதே; அந்த சப்தம் இன்னதை குறிக்கிறது என்பதும் கற்பிக்கப்பட்டதே. இப்படி கற்பிப்பது சித்தத்தின் வேலை.
எல்லாம் ஒன்றாகவே இருப்பது போல தோற்றத்தை கொடுத்தாலும் அவற்றை பிரித்து தனித்தனியே ஸம்யமம் செய்பவன் உலகில் உள்ள எல்லா ப்ராணிகளின் சப்தத்தையும் அந்த சப்தத்தின் பொருளையும் ஞானத்தையும் அறிவான்.

ஸ்ரீமத் ராமாயணத்தில் கேகய ராஜா இப்படிப்பட்ட சித்தி அடைந்திருந்ததாக கதை உள்ளது. அவன் ராணியுடன் அந்தரங்கமாக இருக்கையில் திடீரென்று சிரிக்கிறான். ஏன் என்று அவனது மனைவி கேட்கையில் கட்டிலின் கீழ் இரண்டு எறும்புகள் பேசிக்கொண்டு இருப்பதை கேட்டதாயும் அதனால் சிரிப்பு வந்ததாயும் சொல்கிறான். அது என்ன என்று கேட்ட மனைவியிடன் "போக அங்கமான ஸத்ய ப்ரதிஷ்டை முதலியவற்றில் சித்தி அடைந்த ஒரு பெரியவர் பிராணிகள் பேசுவதை அறியும் முறையை உபதேசித்து இருக்கிறார். அதை வெளியில் சொல்ல முடியாது. அப்படி சொன்னால் உயிருக்கு ஆபத்து வருமென சொல்லி இருக்கிறார்" என்கிறான். இது போல பல பழைய கதைகளிலும் காணலாம்.

2 comments:

Geetha Sambasivam said...

ம்ம்ம் வால்மீகி ராமாயணத்திலே படிச்சது! இதுவும் ஓகே! புரிஞ்சுக்கக் கஷ்டமா இல்லை!

திவாண்ணா said...

ஆகா!