Patanjali Yoga sutra:
बन्धकारणशैथिल्यात्प्रचारसंवेदनाच्च चित्तस्य परशरीरावेशः ।।38।।
ப³ந்த⁴காரணஶைதி²ல்யாத்ப்ரசாரஸம்°வேத³நாச்ச சித்தஸ்ய பரஶரீராவேஶ: || 38||
ப³ந்த⁴காரண = பந்தத்துக்கு காரணமான (தர்ம அதர்மங்களுக்கு); ஶைதி²ல்யாத் = ஸம்யமம் மூலம் தளர்ச்சி ஏற்பட்டு இருப்பதினாலும்; ப்ரசார = நாடிகளில்; ஸம்°வேத³நாச்ச = ஸம்யமத்தாலும்; சித்தஸ்ய = சித்தத்தின்; பர ஶரீர ஆவேஶ: = தன் சரீரத்தை விட வேறு சரீரத்தில் பிரவேசித்தல் (உண்டாகிறது).
இயற்கையில் எங்கும் நிறையக்கூடிய சித்தம் அந்தந்த ஜீவர்களின் தர்ம அதர்மங்களால் ஒரு உடம்பிலேயே கட்டுண்டு இருக்கிறது. இதுவே பந்தம் ஆகும். ஸம்யமத்தால் கர்ம நாசமடைந்து இந்த கட்டு தளர்ந்து போனதால் பந்தம் விடுகிறது. மேலும் நாடிகளில் ஸம்யமம் செய்ய சித்தத்தின் சஞ்சார ஸ்தானம் பற்றி அறியப்படுகிறது. இந்நிலை அடைந்த சித்தம் வேறு எந்த உடலிலும் பிரவேசிக்கலாம். இது ப்ரவேசித்தல் சித்தத்தின் ஆளுகையில் உள்ள பிராணன் இந்திரியங்கள் ஆகியவையும் கூடவே ப்ரவேசிக்கும். இதுவே பர ஶரீர ஆவேஶம் என்னும் உடலைவிட்டு உடல் பாயும் சித்தி ஆகும்.
6 comments:
divaaji,
kavinayaavin moolam ungal link
kidaiththathu.
ingu neengal ezhuthi iruppathai "koodu vittuk koodu paaithal"enru padiththirukkiren especialy ,sankarar ,ubhaya bhrathi[mandanamisrar's wife]yai vaathaththil jeikka oru rajaavin irantha udalil koodu paainththathaagap padichchathaaga ninaivu.thank you for nicely putting it in thamizh.
அம்மா, சரியாத்தான் சொல்லி இருக்கீங்க! நல்வரவு!
இதையும் தாண்டியது பிரம்ம ஞானம் இல்லையா?
அட?? எனக்கு சித்தி கிடைச்சுடுச்சோ?? பின்னூட்டம் போட்டதுமே பப்ளிஷ் ஆகி இருக்கே?? :)))))))) போறேன், வேலை இருக்கு!
ப்ரஹ்ம ஞானம் இன்னும் மேஏஏஎலே இருக்கு!
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!
Post a Comment