Patanjali Yoga sutra:
ततः प्रातिभश्रावणवेदनादर्शास्वादवार्ता जायन्ते ।।36।।
தத: ப்ராதிப⁴ஶ்ராவணவேத³நாத³ர்ஶாஸ்வாத³வார்தா ஜாயந்தே || 36||
தத: =அதிலிருந்து (பயிற்சியால் வரும் புருஷ ஸம்யமத்தில் இருந்து); ப்ராதிப⁴ = ஊஹ மாத்திரமான ஞானமும்; ஶ்ராவண = எந்த சப்தத்தையும் கேட்பதும்; வேத³நா = தோலால் எந்த தொடு உணர்வையும் அறிவதும்; ஆத³ர்ஶா = எந்த ரூபத்தையும் கண்ணால் பார்ப்பதும்; ஆஸ்வாத³= நாக்கால் எந்த ருசியையும் அறிவதும்; வார்தா = மூக்கால் எந்த வாசனையை நுகர்வதும்; ஜாயந்தே =ஏற்படுகிறது.
"அப்பாடா! இப்படி எல்லாமே தெரிய வரும் ன்னா வேற என்ன வேணும்" என்று தோன்றுகிறதா? அதைப்பற்றி அடுத்து சொல்கிறார்.
ते समाधावुपसर्गा व्युत्थाने सिद्धयः ।।37।।
தே ஸமாதா⁴வுபஸர்கா³ வ்யுத்தா²நே ஸித்³த⁴ய: || 37||
தே = அவை; ஸமாதௌ⁴ = (நிர்விகல்ப) ஸமாதி விஷயத்தில்; உபஸர்கா³= விரோதிகளாக; வ்யுத்தா²நே = ஸமாதியிலிருந்து வெளி வந்த காலத்தில்; ஸித்³த⁴ய: ஸித்திகளாவன (ஆகின்றன).
யோகத்தின் பரம ப்ரயோஜனம் நிர்விகல்ப ஸமாதியை அடைவது. அந்த வழியில் ஸமாதி கலைந்து வெளிவரும் காலத்தில் ஏற்படும் இந்த சித்திகள் ஜீவனை திசை திருப்ப வாய்புண்டு. அப்போது அவை எதிரிகள் ஆகின்றன. ஆகவே இவற்றில் நிலைத்து நிற்காமல் மேலே சாதனை செய்ய வேண்டும்.
2 comments:
ம்ம்ம் இது புரியறது. சித்திகள் கிடைக்கக் கிடைக்க மேலே மேலே பரமாநந்தத்தையே/பிரம்ம ஐக்கியத்தையே குறிக்கோளா வைச்சுண்டு போகணும், இல்லையா?
ஆமாம். சித்திகள் ப்ரம்ம நாட்டத்தை சிதற வைக்கலாம்.
Post a Comment