Pages

Monday, January 3, 2011

மேற்சொன்ன பரிணாமங்களுடைய தர்மீ:



 शान्तोदिताव्यपदेश्यधर्मानुपाती धर्मी ।।14।।
ஶாந்தோதி³தாவ்யபதே³ஶ்யத⁴ர்மாநுபாதீ த⁴ர்மீ || 14||

ஶாந்த = ஒரு காலத்தில் வேலை செய்து முடித்த; உதி³த = தற்காலத்தில் புதிய வேலை செய்து கொண்டுள்ள; அவ்யபதே³ஶ்ய = காரியத்துக்கு சக்தியாக இருக்கிற; த⁴ர்ம =தர்மத்தை; அநுபாதீ தொடர்ந்து அனுபவிப்பது; த⁴ர்மீ =தர்மீ என்கிற வஸ்துவாகும்.

 ஒரு காலத்தில் வேலை செய்து முடித்த, தற்காலத்தில் புதிய வேலை செய்து கொண்டுள்ள காரியத்துக்கு சக்தியாக இருக்கிற தர்மத்தை தொடர்ந்து அனுபவிப்பது தர்மீ என்கிற வஸ்துவாகும்.

தர்மீ என்பது என்ன? அது ஒரு வஸ்து. எந்த காரியம் நடக்கவும் ஒரு சக்தி பின்னால் வேண்டி இருக்கிறது. அது இல்லாமல் காரியம் நடப்பதில்லை. காரியம் மாறிக்கொண்டே இருந்தாலும் அதன் பின் உள்ள சக்தி அப்படியே இருக்கிறது. அந்த காரியம் நடக்க காரணமாக இருப்பது இந்த தர்மீதான். இது காரியம் நடக்காத போதிலும் மறைந்து இருக்கிறது. தகுந்த நேரம் வரும் போது அது வெளிப்படும்.

யோக சித்தாந்தப்படி காரணம் என்பது தர்மீ; கார்யம் தர்மம். மண் தர்மீ; குடம் தர்மம். காரியம் முடிந்தாலும் காரணம் எஞ்சும். குடம் உடைந்தாலும் மண் எஞ்சும்.
காரணத்தில் காரியம் சக்தி ரூபமாக மறைந்துள்ளது. சரியான நேரத்தில் வெளிப்படுகிறது. எந்த காரணத்தில் எந்த காரியம் உள்ளதென நம்மால் பிரித்து அறிய இயலாது. இப்படி சக்தியாக மட்டும் இருக்கும் நிலை அவ்யபதேச்யநிலையாகும்.

No comments: