सत्त्वपुरुषयोरत्यन्तासंकीर्णयोः प्रत्ययाविशेषो भोगः परार्थत्वात्स्वार्थसंयमात्पुरुषज्ञानम् ।।35।।
Patanjali Yoga sutra:
ஸத்த்வபுருஷயோரத்யந்தாஸம்°கீர்ணயோ: ப்ரத்யயாவிஶேஷோ போ⁴க³: பரார்த²த்வாத்ஸ்வார்த²ஸம்°யமாத்புருஷஜ்ஞாநம் || 35||
அத்யந்தா ஸம்°கீர்ணயோ: = உண்மையில் வேறானவையான; ஸத்த்வ புருஷயோர் = சத்வ புத்தியுடையதும் ஆத்மாவுடையதும்; ப்ரத்யயா விஶேஷோ = தனித்தனியானவை என்ற ஞானம் இல்லாமையே; போ⁴க³: =போகமாகும்; பரார்த²த்வாத் = புருஷனுக்காக ஏற்பட்ட அந்த போகத்தைக் காட்டிலும் உயர்ந்தது; ஸ்வார்த²= சித்த ஸ்வரூப- பிரதி பிம்ப விஷயமான; ஸம்°யமாத் = ஸம்யமம் செய்யும் போது உண்டாகும்; புருஷஜ்ஞாநம் = புருஷனைப்பற்றிய ஞானம்.
புத்தி சத்வ, ரஜ, தமோ குண நிலைகளை உடையது. புருஷனோ இவற்றில் எதிலும் சம்பந்தப்பட்டாமல் அன்னியமானவன். இந்த ஞானம் - நினைப்பு இல்லாவிட்டால் நான் சுகமாக இருக்கிறேன்; துக்கமாக இருக்கிறேன் என்று ஜீவனுக்கு சுக துக்க அனுபவ போகம் உண்டாகிறது. இங்கு புத்தி தனக்கென்று எந்த பிரயோஜனமும் எதிர்பாராமல் வேலை செய்கிறது; அது புருஷனான ஜீவனின் போகம் அபவர்க்கம் இரண்டின் பிரயோஜனத்தை மட்டுமே எதிர் பார்க்கிறது. இதனால் புத்தி மூலம் ஏற்படும் போகம் புருஷனுடையதே.
தெளிவான புத்தியில் புருஷனின் ப்ரதி-பிம்பம் (நிழல்) ஏற்படுகிறது. புத்தி காட்டித்தரும் விஷயங்களை இந்த புருஷ நிழல் அனுபவிக்கிறது. இந்த புத்தி பரார்த்தம் என்றும் புருஷ நிழல் ஸ்வார்த்தம் என்றும் சொல்லப்படுகின்றன. இந்த புருஷ நிழலில் ஸம்யமம் செய்வது ஸ்வார்த்த ஸம்யமம். இதனால் புருஷனைப்பற்றிய ஞானம் உண்டாகிவிடும்.
2 comments:
இந்த புத்தி பரார்த்தம் என்றும் புருஷ நிழல் ஸ்வார்த்தம் என்றும் சொல்லப்படுகின்றன//
இதை இன்னும் எளிமையாய்ச் சொல்லலாமோ?? :( கொஞ்சம் புரிஞ்சுக்க முடியலை!
பர அர்த்தம், ஸ்வ அர்த்தம். மற்றவருக்காக ஏற்பட்டது, தனக்காக ஏற்பட்டது. புத்தியில் ஏற்படுவது புருஷனுக்காகவே ஏற்படுவது; அதனால் பர அர்த்தம்.
Post a Comment