Pages

Friday, January 21, 2011

ஊஹத்தால் உண்டாகும் சித்தி, சித்த வாஸனா ஞானம்:



प्रातिभाद्वा सर्वम् ।।33।।

ப்ராதிபா⁴த்³வா ஸர்வம் || 33||

ப்ரதிபா என்பது முன் பின் எந்த ஆலோசனை காரணம் இன்றி மனதில் திடீரென ஏற்படும் ஒரு வித ஞானம். இதை ஆங்கிலத்தில் இன்ட்யூஷன் என்பர். தமிழில் ஊகம் எனலாம்.

ப்ராதிபா⁴த்³வா = பிரதிபையில் ஸம்யமம் செய்யின்; ஸர்வம் = எல்லாம் (தெரிய வருகிறது.)

சூரியன் உதயமாகு முன் அருணன் உதயாமாக உலகில் எல்லாம் தெரிவது போல; விவேக க்யாதி வரு முன் ஸூசகமாக சித்தத்தில் ப்ரதிபை தோன்றுகிறது. இதில் ஸம்யமம் செய்யும் யோகி மற்ற ஸம்யமங்களின் தேவை இன்றி எல்லாவற்றையும் அறிந்து கொள்கிறான்.

  हृदये चित्तसंवित् ।।34।।

ஹ்ரு«த³யே சித்தஸம்°வித் || 34||

ஹ்ரு«த³யே = ஹ்ருதயத்தில் (ஸம்யமம் செய்யின்); சித்த ஸம்°வித் = சித்தத்தின் அறிவு உண்டாகிறது.

இங்கு சொல்லப்படும் ஹ்ருதயம் பௌதிக ஹ்ருதயம்தான். (மார்பில் தாமரை மொக்கு போல் தலைகீழாக தொங்கும் மாம்ஸ பிண்டம்.)

3 comments:

Geetha Sambasivam said...

ஹ்ருதயம் பெளதீகம் சரி, ஆனால் அந்த intuition??? சாமானியமான எனக்கு ஏற்படும் intuitionக்கும் இதற்கும் வேறுபாடு நிச்சயமாய் இருக்குமே???

Geetha Sambasivam said...

மார்பில் தாமரை மொக்கு போல் தலைகீழாக தொங்கும் மாம்ஸ பிண்டம்.) //

ம்ம்ம்ம்ம்??ஆதார சக்கரங்களைத் தானே இப்படிச் சொல்லுவாங்க?? சித்தி ஏற்பட ஏற்பட தாமரை(சக்கரம்) மலரும்னு சொல்வாங்க. கொஞ்சம் குழப்புதே! :(

திவாண்ணா said...

அதே இன்ட்யூஷன்தான்!
பௌதிக ஹ்ருதயத்திலேயே சூக்ஷ்ம சக்ரமும் இருக்கலாம். கண்ணுக்கு தெரியும் சூரியனிலேயே சூரிய தேவதை உள்ளது போல....