Patanjali Yoga sutra:
श्रोत्राकाशयोः संबन्धसंयामाद् दिव्यं श्रोत्रम् ।।41।।
ஶ்ரோத்ராகாஶயோ: ஸம்°ப³ந்த⁴ஸம்°யாமாத்³ தி³வ்யம்° ஶ்ரோத்ரம் || 41||
ஶ்ரோத்ர =சுரோத்திரம் என்னும் இந்திரியம்; ஆகாஶயோ: = ஆகாயம் ஆகியவற்றின்; ஸம்°ப³ந்த⁴ = ஸம்பந்தத்தில்; ஸம்°யாமாத்³ = ஸம்யமம் செய்ய; தி³வ்யம்° = திவ்யமானதாக (மறைந்த சப்தம், தூரத்தில் உள்ள சப்தம், சூக்குமமான சப்தம்; இவற்றை கிரஹித்தல் ) ஶ்ரோத்ரம் = கேட்கும் திறன் ஆகிறது.
இதே போல் நுகர்தல், தொடுதல், சுவை, காணல் ஆகிய இந்திரியங்களுக்கு நிலம், வாயு, நீர், ஒளி ஆகிய ஐம்பூதங்கள் ஆதாரமாகும். சப்தங்களுக்கு ஆகாசமும், வாசனகளுக்கு நிலமும், சுவைக்கு நீரும், ரூபத்துக்கு தேஜஸும் ஆதாரங்களாகும். இவற்றின் சம்பந்தத்தை ஸம்யமம் செய்து ஸாக்ஷாத்கரித்துவிட்டால் இந்திரியங்களுக்கு -எங்கோ இருக்கும் ஒலியை கேட்பது போன்ற - அசாதாரண அதாவது திவ்யத் தன்மை ஏற்பட்டுவிடுகிறது.
2 comments:
இதுவும் நல்லாவே கேட்குது! :)
இது ஒரு நாள் முந்தியே பப்ளிஷ் ஆயிடுத்து! :-))
Post a Comment