भुवनज्ञानं सूर्ये संयमात् ।।26।।
பு⁴வநஜ்ஞாநம்° ஸூர்யே ஸம்°யமாத் || 26||
பு⁴வநஜ்ஞாநம்° = புவனங்களைப்பற்றிய அறிவு; ஸூர்யே =சூரியனில்; ஸம்°யமாத் = ஸம்யமம் செய்யின்.
சூர்ய மண்டலத்தில் ஸம்யமம் செய்யும் யோகிக்கு எல்லா உலகங்களையும் பற்றிய ஞானம் உண்டாகிறது.
இப்படியே எந்த இடத்தில் ஸம்யமம் செய்கிறோமோ அந்த இடத்தை பற்றி முழுதும் தெளிவாக அறிந்துகொள்ளலாம்.
---
புவனங்கள் ஏழு. பூமியின் சரியான நடுவில் மஹாமேரு பர்வதம் தூண் போல் உள்ளது. (north pole) மேருவின் பின் பக்கம் பூலோகம். அடியில் அவீசி நரகம். இதை அடுத்து வரிசையாக மஹாகாலம், அம்பரீஷம், ரௌரவம்,மஹாரௌரவம், கால சூத்திரம், அந்ததாமிஸ்ரம் என 6 நரகங்கள். மஹாகாலம் பூமியிலும்; அம்பரீஷம் நீரிலும்; ரௌரவம் நெருப்பிலும் மஹாரௌரவம் வாயுவிலும்; காலசூத்திரம் ஆகாசத்திலும்; அந்ததாமிஸ்ரம் தமஸ் ஆகிய இருளிலும் உள்ளன. இவற்றுக்கு பாப கர்மாக்களின் பலனை அனுபவிக்க ஜீவர்கள் செல்கின்றனர். புண்ணிய கர்மாக்களின் பலனாகிய சுகத்தை எல்லோரும் விரும்புகின்றனர்; ஆனால் புண்ணிய கர்மாக்களை செய்வதில்லை. பாப கர்மாக்களின் பலனாகிய துக்கத்தை எல்லோரும் வெறுக்கின்றனர்; ஆனால் பாப கர்மாக்களை ஆவலுடன் செய்கின்றனர்.
மேலும் மஹாதலம், ரஸாதலம், அதலம், சுதலம், விதலம், தலாதலம், பாதாலம் என 7 பாதாலங்கள் உள்ளன.
2 comments:
புண்ணிய கர்மாக்களின் பலனாகிய சுகத்தை எல்லோரும் விரும்புகின்றனர்; ஆனால் புண்ணிய கர்மாக்களை செய்வதில்லை. பாப கர்மாக்களின் பலனாகிய துக்கத்தை எல்லோரும் வெறுக்கின்றனர்; ஆனால் பாப கர்மாக்களை ஆவலுடன் செய்கின்றனர்.//
:(((((((
ஆமாம் ஆக்ஸிமொரான் மாதிரி இருக்கு இல்லை? :-(((
Post a Comment