Pages

Friday, January 7, 2011

முற்பிறவியை அறியும் உபாயம்:



संस्कारसाक्षात्करणात्पूर्वजातिज्ञानम् ।।18।।

ஸம்°ஸ்காரஸாக்ஷாத்கரணாத்பூர்வஜாதிஜ்ஞாநம் || 18||

ஸம்°ஸ்கார =(சித்தத்தில் உள்ள) ஸம்ஸ்காரத்தை; ஸாக்ஷாத் கரணாத் = ஸாக்ஷாத்கரிப்பதால்; பூர்வ ஜாதி ஜ்ஞாநம் = முன் பிறவி குறித்த ஞானம் (உண்டாகின்றது)

சித்தத்தில் உள்ள வாசனைகளில் ஒன்று நினைவை மட்டும் தரும். இன்னொன்று பிறப்பு, ஆயுள், சுகம், துக்கம் ஆகிய அனுபவங்களை தரக்கூடியது. கோடி கல்பங்கள் ஆனாலும் ஒருவரது செய்கைகள் அதற்கான பலனைத்தராது தேய்வதில்லை (नाभुक्तम् क्षीयते कर्म कोटि शतैरपि - நாபு4க்தம் க்ஷீயதே கர்ம கோடி ஶதைரபி). ஒருவரால் ஒரு சமயம் செய்யப்பட்ட செய்கைகள் ஸம்ஸ்கார ரூபத்தில் தன் பலனைத் தரும் வரையில் அசைவற்று இருக்கும் (कताचित् स्वक्रुतम् कर्म कूटस्तमिव तिष्टति - கதாசித் ஸ்வக்ருதம் கர்ம கூடஸ்தமிவ திஷ்டதி)
பொதுவாகவே எவன் எதில் ஸம்யமம் செய்கிறானோ அங்குள்ளவற்றை ஸம்யம பலத்தால் அவன் அறிகிறான்.
இப்படிப்பட்ட ஸம்ஸ்காரங்களில் ஸம்யமம் செய்து அவற்றை நேரில் காண்பவனுக்கு எந்த அனுபவம் இந்த ஸம்ஸ்காரத்தை கொடுத்ததோ அந்த அனுபவம் என்ன என்று தெரிகிறது. இதுவே பூர்வ ஜன்ம ஞானமாகும். யோகி இதே போல மற்றவரின் ஸம்ஸ்காரத்தில் ஸம்யமம் செய்தால் அவருடைய பூர்வ ஜன்மத்தைப்பற்றி அறிகிறார்.

No comments: