Patanjali Yoga sutra:
उदानजयाज्जलपङ्ककण्टकाकदिष्वसङ्ग उत्क्रान्तिश्च ।।39।।
உதா³நஜயாஜ்ஜலபங்ககண்டகாகதி³ஷ்வஸங்க³ உத்க்ராந்திஶ்ச || 39||
(ஸம்யமமத்தால்) உதா³ந =உதானன் என்ற வாயுவை; ஜயாத் = ஜெயிக்க; ஜல = நீர்; பங்க= சேறு (பங்கஜம் = சேற்றில் முளைக்கும் [பூ]); கண்டகா = முள்; ஆதி³ஷு = முதலியவற்றில்; அஸங்க³ = சம்பந்தமின்மை; உத்க்ராந்திஶ்ச = ஆகாசத்தில் செல்லும் தன்மையும்; (உண்டாகிறது).
இந்திரியங்களின் விருத்தி உள் வெளி (ஆந்தரம், பாஹ்யம்) என இரு வகை. உருவம் சப்தம் முதலியன குறித்து ஏற்படும் அறிவு பாஹ்யம். உள்ளே வாயுக்களின் சலனத்தை ஒட்டி ஏற்படும் விருத்தி ஆந்தரம். இந்த உள் விருத்தி எல்லா இந்திரியங்களுக்கும் பொதுவானது. வாயுக்களின் சலனம் இல்லாவிடில் இந்திரியங்களும் உள் விருத்தி அடையா. மூக்கு முதல் ஹ்ருதயம் வரை சலனம் உள்ளது ப்ராண விருத்தி. ஹ்ருதயம் முதல் நாபி வரை உள்ளது ஸமான விருத்தி. இது உட்கொண்ட ஆகாரத்தை ரத்தமாக்குகிறது. (செரிமானம், சத்து உள்ளே செல்லுதல்). நாபி முதல் பாதம் வரை அபான விருத்தி. இது சரீரத்தின் கழிவுப்பொருட்களை வெளித்தள்ளுகிறது. மூக்கின் நுனி முதல் தலையின் உச்சி வரை உதானன். இதுவே உயரக்கிளம்ப ஏதுவாகும். (ஏனைய நூல் ஒன்றில் ஹ்ருதயம் முதல் உச்சி வரை என்றூம் சொல்லி இருக்கிறது) உடல் முழுதும் நிறைந்து உள்ளது வியானன். இவை எல்லாவற்றிலும் சிறந்தது ப்ராண விருத்தியே. இவற்றில் உதானனில் ஸம்யமம் செய்து ஜெயித்தவனால் நீர், சேறு, முள் ஆகிய எதன் மீதும் பாதிப்பு இல்லாமல் நடந்து போக முடிகிறது. மேலும் மரண காலத்தில் அர்ச்சிராதி மார்கங்கள் வழியாக மேலான லோகங்களை அடையவும் இயலும். இதையே ஆகாயத்தில் செல்லும் தன்மை என்றனர். மணிப்ரபை என்ற வ்யாக்கியான நூலில் தனிஷ்டப்படி மரணத்தை அடைவான் என்று பொருள் செய்யப்பட்டு இருக்கிறது.
4 comments:
சக்கரத்தம்மாள் தான் முதல்லே நினைவிலே வராங்க. இப்போவும் சில சித்தர்கள் இப்படிச் செய்யறதாவும் கேள்விப் படறேன்.
அட! யார் அவங்க? கதை சொல்லுங்களேன்!
சக்கரத்தம்மாள் சமீப காலங்களில் நூறு ஆண்டுகள் முன்?? சரியாய் நினைவில் இல்லை. வாழ்ந்த ஒரு சித்தர். இவரைக் கண்டு கொண்டது ஒரு பிரபல பல் மருத்துவர். திருவான்மியூரில் இவரின் அதிஷ்டானமும், அதை ஒட்டிய கோயிலும் உள்ளதாம். போகமுடியலை! :( சக்கரத்தம்மாள் பற்றிக் கூடிய சீக்கிரம் எழுதறேன்.
நன்றி!
Post a Comment