பஞ்சாயதன பூஜை.
இது கல்பத்தில் இருந்து எடுத்து எழுதப்படுவதால் ஸ்லோகங்கள் முதலியன சம்ஸ்க்ருத்ததிலேயே இருக்கும். தமிழ் அபிமானிகள் மன்னிக்க!
பஞ்சாக்ஷரீ உபதேசம் பெற்றவர் மட்டுமே இதை செய்யலாம். ஆகவே அப்படி பூஜையை பல காலம் செய்து கொண்டிருப்பவர் யாரேனும் ஒருவரை அணுகி பஞ்சாக்ஷரீ உபதேசம் செய்து பூஜையை துவக்கி வைக்கும்படி வேண்டிக்கொள்ள வேண்டும். சும்மா தானே ஆரம்பிப்பதை விட நல்லது. மந்திர சித்தி ஆகலைன்னாலும் கொஞ்சமாவது சக்தி ஏறி இருக்கணும். மந்திரம் இன்னதுன்னு தெரியும், உபதேசம் செய்யறேன் என்கிறது சரி வராது. மின்சாரம் உயர் அழுத்தத்தில் இருந்துதான் தாழ் அழுத்தத்துக்கு பாய முடியும்.அது போல மந்திர ஜபம் அதிகம் செய்தவர் உபதேசம் செய்தால் நமக்கும் மந்திர சித்தி சீக்கிரம் கிடைக்கும்.
சிவ பஞ்சாக்ஷரீ அல்லது சக்தி பஞ்சாக்ஷரீ வழக்கத்தில் அதிகம் இருக்கிறது. கிடைக்கும் நேரத்துக்கு தகுந்த எண்ணிக்கையில் செய்யலாம் ஒவ்வொரு நாளும் பூஜை ஆரம்பிக்கும் முன் இதை ஜபம் செய்துவிட்டுத்தான் பூஜையை ஆரம்பிக்க வேண்டும்.
முன்னே கொடுத்த பொதுவான முறைகளுடன் இன்னும் சிலது இந்த பூஜையில் சேர்ந்து வரும். அதனாலத்தான் இதுக்குன்னு தனியா எழுத வேண்டி இருக்கு.
முன்னால் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்: இப்படி சீரியஸான பூஜைகள் செய்யும்போது ஸ்வாமியை விளக்கில்லாமல் வெளியே வைக்கக்கூடாது. ஒரு பெட்டி இதற்காக விசேஷமாக செய்து அதிலேயே வைக்க வேண்டும். தீபம் ஏற்றிவிட்டு வெளியே எடுத்து பூஜை முடிந்தபின் திருப்பி பெட்டியில் வைக்க வேண்டும். வசதியுள்ள பலர் தனியாக மணிகளுடன் பெட்டி செய்து வைத்துக்கொள்கிறார்கள். முன் காலத்தில் ஒரு ஓலைப்பெட்டியில் வைப்பர். ஓலைப்பெட்டியோ, மணிகள் வைத்த தேக்கு மர பெட்டியோ ஸ்வாமி ஜம்மென்று இருப்பார். அவர் பார்ப்பது நம் பக்தி, சிரத்தையைத்தான்.
ஸ்வாமியை வைக்கும் இடத்தை நீர் விட்டு/ஈரத்துணியால் சுத்தம் செய்ய வேண்டும்.
முதலில் ஆசமனம். தலையில் குட்டிக்கொண்டு விநாயகரை நினைக்க வேண்டும். ஸ்லோகம்: சுக்லாம்பரதரம்….
6 comments:
இது கல்பத்தில் இருந்து எடுத்து எழுதப்படுவதால் ஸ்லோகங்கள் முதலியன சம்ஸ்க்ருத்ததிலேயே இருக்கும். தமிழ் அபிமானிகள் மன்னிக்க!//
ஹிஹிஹி, ஆராக்கும் அது???
தொடருங்கோ
கீ அக்கா, நீங்க முந்தின நாள் போடறீங்க! அதுக்கு நோட்டிபிகேஷன் வரதில்லை. எல்கே காலைல போடறார், ப்ராம்டா வந்துடறது. ஏன்? ப்ளாகர் கூட சண்டை ஏதேனும் போட்டு இருக்கீங்களா? :-))
யாராகும்? குறிப்பா எல்லாம் ஒண்ணுமில்லை. யேரேனும் இருப்பாங்க.
எல்கே, யெஸ், மதுரை போய் வந்து அப்புறம்.
கீ அக்கா, நீங்க முந்தின நாள் போடறீங்க! அதுக்கு நோட்டிபிகேஷன் வரதில்லை. எல்கே காலைல போடறார், ப்ராம்டா வந்துடறது. ஏன்? ப்ளாகர் கூட சண்டை ஏதேனும் போட்டு இருக்கீங்களா? :-))//
எல்லாம் கூகிள் சதி, வேறே என்ன! :)))) என்னோட ப்ளாக் பதிவுகளிலே லிங்க் போறதே இல்லை. மார்க்கி போறது. பின்னூட்டத்திலே லிங்க் போகுது. கூகிளாராலே என்னமோ சதி வேலை நடக்குது! :)))))))
ok ok
Post a Comment