Pages

Thursday, March 3, 2016

ஜீவனின் சரித்திரம் - 9


சென்ற இடத்தில் ஜீவா பலவித துன்பங்கள் அனுபவித்தான். அவன் சொந்த லாபத்துக்காக யாகங்களில் பலியிட்ட மிருகங்கள் இப்போது அவனை முட்டி கிழித்தன. கத்திகளால் வெட்டின. அளவில்லா இருளில் எண்ணிலா வருடங்கள் கழிந்தன, ஒரு நாள் யாரோ வந்தார்கள். “உன் தண்டனைக் காலம் ஏறத்தாழ முடிந்துவிட்டது, பெண்ணையே நினைத்துக்கொண்டிருந்தாய். அதனால் நீயே ஒரு பெண்ணாக பிறப்பாய்….”

அடுத்து ஜீவா விழித்த போது விதர்ப ராஜ்யத்தில் ராஜாவின் மகளாக பிறந்து இருந்தாள். மலயத்வஜன் என்ற பாண்டி நாட்டு அரசன் தன் வாட் திறமையால் மற்ற அரச குமாரர்களை வீழ்த்தி இவளை இல்லத்தரசியாக அடைந்தான். ஜீவா இவனிடம் கரிய கண்கள் கொண்ட ஒரு மகளையும் ஏழு குமாரர்களையும் பெற்றாள். இவர்கள் வம்சமே பின்னால் தமிழ்நாட்டை ஆண்டது. இந்த பெண்ணை அகஸ்திய முனிவர் மணந்தார். இவர்களது மகன் திட வைராக்கியம் படைத்த த்ருடச்யுதர் என்பவர். இவது புத்திரர் உத்தம முனிவர் என்னும் இத்மவாஹர்.

தகுந்த வயதை எட்டியபோது தன் மகன்களுக்கு நாட்டை பிரித்துக்கொடுத்தான் மலையத்வஜன். பின் ஸ்ரீ க்ருஷ்ணனை ஆராதிக்க திருவேங்கட மலையை அடைந்தான். ஜீவாவும் தன் சௌக்கியங்களை எல்லாம் விட்டு நிலவொளி சந்திரனைத்தொடர்வது போல அவனை பின் தொடந்தாள். சந்த்ரவஸா, தாம்ர பர்ணீ, வடோதகா முதலிய நதிகளின் புண்ணிய தீர்த்தங்களில் நீராடி தன்ன புனிதப்படுத்திக்கொண்டான். காட்டில் கிடைத்த கிழங்கும் கொட்டை, வேர், பழம், பூ, இலை, புல், நீர் என இவற்றை மட்டும் உணவாகக்கொண்டு தன்னை வருத்திக்கொண்டு தவத்தில் ஈடுபட்டான். ப்ரம்ஹம் ஒன்றே உண்மை என்ற உயர்ந்த எண்ணத்தை மனதில் கொண்டு குளிர் - சூடு, காற்று மழை, பசி தாகம், இனியது -கொடியது. இன்பம் துன்பம் என்னும் இரட்டைகளை வென்றான். தவத்தாலும் ஞானத்தாலும் தன் கர்மங்களை வென்றான். யமம் நியமம் முதலியவைகளை அனுட்டித்து இந்த்ரியங்களையும் ப்ராணனையும் அடக்கி ப்ரம்ஹ நிஷ்டனாக நூறு ஆண்டு காலம் ஓரிடமாக கிடந்தான். தன் உடலினின்று வேறு பட்டு தன் உடலையும் அது குறித்த அறிவையும், அந்த அறிவை ப்ரகாசப்படுத்துகிற ஆன்மாவையும் கண்டு கொண்டான். ப்ரம்ஹத்தில் தன்னையும், தன்னில் ப்ரம்ஹத்தையும் அறிந்து பின் அந்த அறிவையும் துறந்து இவ்வுலகில் இருந்து விடுபட்டான்.

No comments: