ஞானம்
எப்படி வரும் என்று மாஸ்டர்
விளக்கினார். உள்ளதை
உள்ளபடி மக்கள் பார்ப்பதில்லை.
பார்ப்பது
எதுவானாலும் தாமே தம் சௌகரியதுக்கு
விளக்கம் கொடுத்துக்கொள்கிறார்கள்.
அப்படி
இல்லாமல் உள்ளதை உள்ளபடி
பார்த்தால் ஞானம் பிறக்கும்.
சீடர்கள்
விளக்கச்சொன்னார்கள்.
பதிலுக்கு
வழக்கம் போல ஒரு கதை வந்தது.
இரண்டு
கத்தோலிக்கர்கள் ஒரு சாலையில்
கடுமையான சீரமைப்பு வேலை
செய்து கொண்டு இருந்தார்கள்.
அந்த இடத்துக்கு
அருகில் ஒரு விலைமாதர்
குடியிருப்பு இருந்தது.
மாலை
ஆன போது ஒரு ராபி அந்த
குடியிருப்புக்குள் போவதை
பார்த்தார்கள் “ ஹும் பாத்தியா?
வேறென்ன
செய்வாங்க! இவங்க
இப்படித்தான்.”
கொஞ்ச
நேரத்தில் ஒரு ப்ராடஸ்டண்ட்
பாதிரி உள்ளே போனார்.
“ஒண்ணும்
ஆச்சரியமில்லே! இவங்களும்
இப்படித்தான்!”
இன்னும்
கொஞ்ச நேரமாயிற்று.
உள்ளூர்
கத்தோலிக்க பாதிரி அக்கம்
பக்கம் பார்த்துவிட்டு
முக்காடு போட்டுக்கொண்டு
உள்ளே போனார்.
“பாத்தியா?
ஐயோ பாவம்.
யாரோ சாகிற
தறுவாய்ல இருக்காங்க!”
No comments:
Post a Comment