ஒரு
சீடன் ஆர்வத்துடன் கேட்டான்:
ஞானம் பெற
நான் செய்ய வேண்டியதென்ன?
உள்ளதை
உள்ளபடி பார்ப்பது.
சரி.
அதற்கு நான்
செய்யக்கூடியது என்ன?
மாஸ்டர்
புன்னகைத்தார். உனக்கு
ஒரு நல்ல செய்தியும் ஒரு கெட்ட
செய்தியும் இருக்கு!
கெட்ட
செய்தியை சொல்லுங்க.
உள்ளதை
உள்ளபடி பார்க்க நீயா ஒண்ணும்
செய்ய முடியாது. அது
ஒரு வெகுமதி!
ம்ம்ம்
சரி நல்ல செய்தியை சொல்லுங்க.
உள்ளதை
உள்ளபடி பார்க்க நீயா ஒண்ணும்
செய்ய முடியாது. அது
ஒரு வெகுமதி!
No comments:
Post a Comment