மடத்துக்கு
பக்கத்து நாட்டு அரசர்
வரப்போகிறார் என்று செய்தி
பரவியது. எல்லாரும்
பரபரப்புடன் இருந்தனர்….
மாஸ்டரைத்தவிர!
அந்த
நாளும் வந்தது. அரசர்
வந்து மாஸ்டருக்கு தலை தாழ்த்தி
வணக்கம் செலுத்தினார்.
பின்னர்
சொன்னார் “நீங்கள் ஆன்மீகத்தில்
மிகவும் முன்னேறியவர் என்று
கேள்விப்பட்டேன். அதனால்
அதன் சாரத்தை உங்களிடம் கேட்க
வந்தேன்.”
“கற்றுக்கொண்டு
என்ன செய்யப்போகிறீர்கள்?”
“என்
இருப்பின் இயல்பை விசாரித்து
அறிய வேண்டும். அப்படி
அறிந்தால் நான் என்னையே
கட்டுப்படுத்திக்கொள்ள
முடியும்; என்
நாட்டு மக்களையும் கட்டுப்படுத்த
முடியும். அதன்
மூலம் நாட்டில் அமைதியும்
நல்லிணக்கமும் நிலவும்!”
“நல்லது.
ஆனால் இப்போதே
எச்சரிக்கிறேன். அந்த
விசாரணையில் நீங்கள் நல்லிணக்கம்
கட்டுப்பாட்டால் வருவது
அல்ல; சரணாகதியால்
வருவது என்று தெரிய வரலாம்!
”
No comments:
Post a Comment