மாஸ்டர்
தன்னுடைய இந்த கதையை தானே
சொல்லுவதை பெரிதும் விரும்புவார்.
முதல்
குழந்தை பிறந்தது. ஒரு
நாள் குழந்தையின் தொட்டில்
இருந்த அறைக்கு போன போது தன்
மனைவி தொட்டில் அருகில்
பார்த்துக்கொண்டு நிற்பதை
கண்டார். அவர்
முகத்தில் ஒரு பிரமிப்பு;
அவநம்பிக்கை;
பரவசம்;
புளகாங்கிதம்!
மாஸ்டருக்கு
ஆனந்தக்கண்ணீரே வந்துவிட்டது!
சத்தமில்லாமல்
மெதுவாக மனைவியை அணுகி
முணுமுணுத்தார் “ டியர்!
நீ என்ன
நினைத்துக்கொண்டு இருக்கிறாய்
என்பதை மிகச்சரியாக நான்
அறிவேன்!”
சற்று
திகைத்த மனைவி சொன்னார்.
ஆமாம்!
தொட்டில்
எப்படி இவ்வளோ குறைச்சலான
விலையில கிடைச்சதுன்னு
ஆச்சரியப்பட்டுகிட்டு
இருக்கேன்!
No comments:
Post a Comment