கடவுள்
என்கிற டாபிக் எப்போது
எழுந்தாலும் மாஸ்டர் சொல்லுவார்
கடவுள் உண்மையில் மனித மனதுக்கு
அகப்படாதவர். ஒரு
புதிர். கடவுளைப்பற்றி
யார் எது சொன்னாலும் அது
மக்களாக அர்த்தம் செய்து
கொண்ட கருதுகோளே தவிர அது
உண்மை என்று சொல்ல முடியாது.
ஒரு
நாள் விளக்க முற்பட்டார்.
கடவுளைப்பத்தி
ஒண்ணுமே சொல்ல முடியாது.
அவர் சொற்களுக்கு
அப்பாற்பட்டவர். அதனால
அவர் உலகை உருவாக்கினார்ன்னோ
கடவுள் நம்மை நேசிக்கிறார்ன்னோ
கடவுள் கிரேட்ன்னோ ஒண்ணுமே
சொல்ல முடியாது. வேணுமானா
கடவுள் என்கிற நம்முடைய
கருதுகோள் உலகை உருவாக்கித்து;
நம்மை
நேசிக்கிறது; க்ரேட்
ன்னு சொல்லிக்கொள்ளலாம்.
ஒரு சீடன் கேட்டான், அப்ப
கடவுள் பத்திய நம்
கருதுகோள்களை எல்லாம் தூக்கிப்போட்டுடணுமா?
மாஸ்டர்
சொன்னார்: நீ
அதை உருவாக்காம இருந்தா
தூக்கிப்போட வேண்டிய அவசியமே
வந்து இருக்காது!
No comments:
Post a Comment