மடாலயத்தின்
முன் ஒரு கும்பல் கூடி மாஸ்டரை
நோக்கி பாடல்களை பாடிக்கொண்டு
இருந்தது. அவர்கள்
கைகளில் “ஏசுவே பதில்” என்னும்
வாசகம் தாங்கிய பதாகைகள்.
அவர்களுள்
சிடுசிடுவென்று இருந்த ஒருவரை
அணுகி மாஸ்டர் கேட்டார்: "சரிதான்;
ஆனா கேள்வி
என்ன?"
அவருக்கு
தூக்கி வாரிப்போட்டது.
கொஞ்சம்
சுதாரித்துக்கொண்டு “ஏசு
கேள்விக்கு பதில் அல்ல;
நம்
பிரச்சினைகளுக்குத்தான்
பதில்” என்றார்.
மாஸ்டர்
“ ஓஹோ! சரிதான்.
அப்படியானால்
பிரச்சினைதான் என்ன?”
என்று கேட்டார்!
பின்னால்
சீடர்களுடன் பேசிக்கொண்டு
இருந்தபோது சொன்னார்:
“நிஜமாகவே
ஏசுதான் பதில் என்றால் ஏசு
என்பதன் அர்த்தம் இதுதான்;
யார் பிரச்சினையை
உருவாக்குகிறார்கள்,
எப்படி
என்பதன் தெளிவான புரிதல்.”
No comments:
Post a Comment