அதீதமாக
பிரார்த்தனை செய்வதைக்குறித்து
மாஸ்டர் அடிக்கடி பேசுவார்.
அட!
நாம் கடவுளை
மட்டும் நம்பி இருக்க வேண்டாமா?
என்றார்
ஒருவர்.
காதலியின்
நலத்தை விரும்பும் காதலன்
சிலதுலேந்து அவளுக்கு விடுதலை
கொடுக்கணும். குறிப்பா
காதலியை தன்கிட்டேந்து
காப்பாத்தணும்!
பின்னால்
கடவுளுக்கும் பக்தனுக்குமான
கற்பனை உரையாடலை சொன்னார்.
பக்தன்:
என்னை விட்டு
போயிடாதீங்க கடவுளே!
கடவுள்:
நான் போறது
உன்னுக்குள்ள பரிசுத்த ஆவி
வரதுக்குத்தான்.
பக்தன்:
அது எங்கே
இருக்கு?
கடவுள்:
எது மேலேயும்
சார்ந்து இருக்காம இருக்கிற
சுதந்திரத்துலேந்துதான்!
No comments:
Post a Comment