Pages

Wednesday, September 21, 2016

கிறுக்கல்கள் - 163





மிகவும் முன்னேறிவிட்ட நாடு அது.
நாளாக ஆக நவீன உலகத்தில் பாலியல் வறட்சி அதிகமாகிக்கொண்டு இருக்கிறது” என்றார் மனநோய் மருத்துவர்.
அதென்ன?” என்று கேட்டார் மாஸ்டர்.
உடலுறவுக்கு இச்சை இல்லை”.
ஓஹோ! அதற்கு என்ன செய்யப்போகிறீர்கள்?”
எங்களுக்கு தெரியவில்லை! உங்களுக்கு ஏதேனும் ஐடியா இருக்கா?”
இருக்கே!”
என்னது?”
அதை மீண்டும் பாபச்செயல் ஆக்கிவிடலாம்” என்றார் மாஸ்டர் ஒரு குறும்புப்புன்னைகையோடு! 

No comments: