மக்கள்
ஒருவரை ஒருவர் எப்படி
பார்க்கிறார்கள் என்பதற்கு
மாஸ்டர் இந்த கதையை சொன்னார்.
அவர்
திருமணம் செய்து கொண்ட பிறகு
நகரில் பத்தாவது மாடியில்
வசித்து வந்தார். அவருடைய
இளம் மனைவி ஒரு நாள் குளித்துவிட்டு
துண்டை எடுக்க அறைக்கு வந்தார்;
உறைந்து
போனார்.
ஜன்னலுக்கு
வெளியே இருந்துகொண்டு ஒருவர்
கண்ணாடியை சுத்தம் செய்து
கொண்டிருந்தவர் இவரை
பார்த்துக்கொண்டு இருந்தார்.
உறைந்து போன
அம்மணி நகரக்கூட முடியாமல்
பேச்சற்று வெறித்து பார்த்துக்கொண்டு
நின்றார். ஒரு
நிமிடம் சென்றது. வெளியே
இருந்தவர் கேட்டார்.
“ஏன் அம்மணி,
முன்னால்
நீங்க கண்ணாடி சுத்தம்
செய்கிறவரை பார்த்ததே இல்லையா?”
No comments:
Post a Comment