மன
நோய் மருத்துவர்களுக்கு
எதிராக மாஸ்டர் ஏதும் சொல்வதில்லை.
இருந்தாலும்
அவர்களால் பெரியதாக ஒன்றும்
செய்ய முடியாது என்பார்.
ஒரு பிரச்சினையை
இன்னொரு பிரச்சினையாக
மாற்றிவிடுவார்கள்;
அவ்வளவே.
இதற்கு ஒரு
கதை சொன்னார்:
பஸ்ஸில்
ஒருவர் செய்தித்தாளால் சுற்றி
ஒரு பெரிய கனமான பார்சலை
எடுத்துக்கொண்டு போய்க்கொண்டு
இருந்தார்.
பக்கத்தில்
இருந்தவர் அதை பார்த்து அது
என்ன என்று அறிய விழைந்தார்.
ஆவலை
அடக்கமாட்டாமல் கேட்டார்
“பார்சலில் என்ன?”
“இது
ஒரு வெடிக்காத குண்டு.
அரசு அலுவலகத்தில்
ஒப்படைக்க எடுத்துப்போகிறேன்!”
“கடவுளே
இதை எல்லாம் மடியில் வெச்சுக்கொண்டு
போவாயா? நீ
முட்டாளா? சீட்டுக்கு
அடியில வை!”
No comments:
Post a Comment