குடும்பக்கட்டுப்பாடு
பற்றி வெவ்வேறு கருத்துகள்
நிலவிய காலம். ஒரு
சாரார் எத்தனை குழந்தைகள்
பெற்றுக்கொள்வது என்பது
அவரவர் சொந்த்த விஷயம் என்றனர்.
ஒரு சாரார்
இல்லை அது நாடுதான் முடிவு
செய்ய வேண்டும் என்றனர்.
மாஸ்டரை
கேட்ட போது அவர் இந்த கதையை
சொன்னார்.
“ஒரு
தேசம் இருந்தது. அங்கே
தொழிற்நுட்பம் வெகுவாக
முன்னேறி யார் வேண்டுமானாலும்
கைப்பிடி அளவுக்கு -
கையெறி குண்டு
அளவுள்ள - ஒரு
அணுகுண்டை தயார் செய்து
வைத்துக்கொள்ள முடியும்
என்றாகிவிட்டது. அது
அவ்வளவு சின்னதானாலும் ஒரு
நகரத்தையே முழுக்க முழுக்க
தகர்க்கக்கூடிய சக்தி வாய்ந்தது.
இதை
வைத்துக்கொள்ள சுதந்திரம்
குறித்து கசப்பான விவாதங்கள்
பல நடந்தன. கடைசியில்
ஒரு சமாதானம் எட்டப்பட்டது.
அதன் படி
லைசென்ஸ் இல்லாமல் யாரும்
பொது வெளியில் அணுகுண்டை
எடுத்துச்செல்லக்கூடாது.
ஆனால் யாரும்
வீட்டில் என்ன செய்கிறார்கள்
என்பது அவரவர் பாடு!
No comments:
Post a Comment