பஞ்ச கச்சம் வெச்சு வேட்டி கட்டறது நம்ம நாட்டுல பரவலா இருந்த ஒண்ணு. இது கொஞ்சம் கொஞ்சமா மறைஞ்சு போச்சு. இப்ப சிலர்மட்டுமே அதுவும் ஏதேனும் விசேஷ தினத்தில் மட்டுமே அப்படிக்கட்டுகிறார்கள். பஞ்சகச்சம் வெச்சு ஏன் கட்டணும் என்கிறதெல்லாம் வேற விஷயம். இப்ப இங்கே எழுத வந்தது, அதை கட்டும் விதத்தில இருக்கற ஒரு சில நுணுக்கங்களை.
பஞ்ச கச்சம் - 5 கச்சம். இந்த அஞ்சும் எங்கே எங்கே வரது?
வலது, இடது பக்கங்கள் இடுப்பில.
ரைட், ரெண்டு!
முன் பக்கம் ஒண்ணு.
ரைட், மூணு.
பின்னால ஒண்ணு, நாலு!
இல்ல. அது குச்சம்!
ம்ம்ம்ம்ம்???
இடது பக்கம் கட்டும் போது கிடைக்கற போல்டுல ஒண்ணு. நாலு.
இல்ல. அது குச்சம்!
ம்ம்ம்ம்ம்???
இடது பக்கம் கட்டும் போது கிடைக்கற போல்டுல ஒண்ணு. நாலு.
நிறைய பேர் செய்யாத அஞ்சாவது - வெர்டிக்கலா தொங்கற பார்டரை பிடிச்சு மேலே தூக்கி முன் பக்க கச்சத்தோடவே சொருகணும். இதுல எவ்வளோ உசரம் என்கிறதை அட்ஜஸ்ட் செய்யலாம். வேட்டி தரையில புரளாம ஓரளவு தடுக்கும். இதை அட்ஜஸ்ட் செஞ்சும் புரண்டுதுன்னா இடுப்பு மடிப்பில சுருட்டி விட்டு அட்ஜெஸ்ட் செய்யலாம். இல்லைன்னா வேற சைஸ் பாத்துதான் வாங்கணும்!
No comments:
Post a Comment