ஒரு
மதம் சார்ந்த சீடன் மீண்டும்
மாஸ்டரிடம் வந்தான்.
நம் புனித
நூல்கள் எதுவும் கடவுளை சரியாக
காட்டாது என்கிறீர்களா?
இப்படித்தான்
இருப்பார் என்று சொல்லக்கூடியவர்
கடவுள் இல்லை. அவர்
ஒரு புதிர்… நம்மால் புரிந்து
கொள்ள முடியாதவர்.
பின்னே
புனித நூல்கள் நமக்கு எதைத்தான்
தருகின்றன?
பதிலாக
ஒரு கதை வந்தது.
மாஸ்டரும்
நண்பர்களும் ஒரு சீன ரெஸ்டாரண்டில்
உணவருந்திக்கொண்டு இருந்தார்கள்.
அப்போது
அங்கிருந்த இசைக்குழுவில்
ஒருவர் ஒரு பழைய பாடலை இசைக்க
ஆரம்பித்தார். எல்லாருக்கும்
அது பழகியதாக இருந்ததே ஒழிய
சரியாக அதை என்ன என்று சொல்ல
முடியவில்லை. மாஸ்டர்
ஒரு சர்வரை கூப்பிட்டு அவர்
என்ன வாசிக்கிறார் என்று
கேட்டு வர அனுப்பினார்.
அவரும் போய்
கேட்டுவிட்டு வந்தார்.
உடல் வளைத்து
வணக்கம் செலுத்தி மகிழ்ச்சியுடன்
அவர் சொன்னார் "ஐயா,
அவர் வயலின்
வாசிக்கிறார்!”
No comments:
Post a Comment