கூகுளார்
சொல்லறார் இத்தோட 2002
பதிவுகள்
ஆயிடுத்தாம். இது
2003 ஆவது!
எழுத
ஆரம்பிச்சப்ப எனக்கு
புரியறதுக்காகத்தான் எழுத
ஆரம்பிச்சேன். ஒரு
விஷயத்தை உள் வாங்கினோமா
இல்லையா என்கிறது அதை நாம்
நம்ம மொழியில் எழுத
ஆரம்பிக்கறப்பத்தான் சரியா
தெரிய வரும்! அதுக்காக
ஆரம்பிச்சது!
அத்தோட
பலர்கிட்டேயும் ஆன்மீகத்தைப்பத்திய
ஒரு சரியான புரிதல் இல்லைன்னு
தோணித்து. டம்மீஸ்
சீரியல் புத்தகங்கள் எனக்கு
ரொம்ப பிடிக்கும்! எதுவும்
பெரிசா தெரிஞ்சதா அஸ்யூம்
பண்ணிக்காம அடிப்படையில
இருந்து சொல்லித்தரது.
அதே பாணிலத்தான்
இதை எழுதணும்ன்னு நினைச்சேன்.
அதனாலத்தான்
இந்த மாதிரி ப்ளாக் தலைப்பும்.
போகிற போக்கில்
என் மனசிலேயும் விஷயங்களை
சீர் செஞ்சுக்க முடிஞ்சது.
இது
வரை இரண்டு முறையாவது போதும்,
இனி எழுத
வேண்டாம்ன்னு தோணி இருக்கு!
ஒவ்வொரு
முறையும் ஏதோ ஒண்ணு திருப்பி
எழுத வைக்கறது.
ஒரு
தொடரை எழுதிக்கொண்டு இருப்பேன்.
இத்தோட
போறும்ன்னு நினைப்பேன்.
சரியா அந்த
தொடர் முடியும் தறுவாயில
இன்னொன்னு வந்து என்னை எழுதுன்னு
வந்து நிக்கும்!
இப்படித்தான்
ஶிவனோட நாமா
பத்தாயிரம், ரமணர்
பற்றி தொடர் எல்லாம் வந்தது.
அப்பறமா
அதைப்பத்தி நினைக்கறதை எல்லாம்
விட்டுட்டேன். இன்னும்
எழுத சரக்கு ஏதும் இருக்கான்னு
தெரியலை! சொல்ல
நினைச்சது எல்லாம் சொல்லியாச்சுன்னு
1000 பதிவுகள்
தாண்டினப்பவே பதிவுல எழுதிட்டேன்.
அது வரை
படிச்சா பேசிக்கா ஆன்மீகத்தை
பத்தி தெரிஞ்சுக்கலாம்.
அதுக்கு
மேலே எல்லாம் குருபாடு
சிஷ்யன்பாடுதான்!
கிறுக்கல்கள்
சீரீஸ்ல இன்னும் கொஞ்சம்
பாக்கி இருக்கு. அதுக்கப்பறம்
ஏதேனும் வருமா வராதான்னு
தெரியாது. கூறாமல்
சன்யாஸம் கொள்தான்!
எல்லாருக்கும்
நமஸ்காரம்.
No comments:
Post a Comment