ஹிந்து
இந்தியா கடவுளையும் அவரது
படைப்பையும் விளக்க ஒரு
அருமையான பிம்பத்தை வைத்திருக்கிறது.
இறைவன்
நடனமாடுபவர். படைப்பு
நடனம். நடனம்
நடனமாடுபவர் இல்லை.
ஆனால்
அவரில்லாமல் நடனமும் இல்லை!
அது அருமையாக
இருக்கிறது என்று எடுத்து
பையில் போட்டுக்கொண்டு போக
முடியாது! நடனமாடுபவர்
நிறுத்தி விட்டால் நடனமும்
நின்று போகிறது!
கடவுளைத்தேடி
நாம் மிக அதிகமாக யோசிக்கிறோம்;
சிந்தனை
செய்கிறோம்; பேசுகிறோம்.
படைப்பு
என்னும் இந்த உலகத்தை பார்த்தபடி
பேசிக்கொண்டே இருக்கிறோம்;
சிந்தனை
செய்து கொண்டே இருக்கிறோம்.
ஆராய்கிறோம்;
தத்துவங்களை
உருவாக்குகிறோம். எல்லாம்
வெற்று இரைச்சல் மட்டுமே!
அமைதியாக
அந்த நடனத்தை பாருங்கள்.
வெறுமனே
கவனியுங்கள். ஒரு
விண்மீனை; ஒரு
பூவை; ஒரு
காயும் இலையை; ஒரு
பறவையை; ஒரு
கல்லை..... நடனத்தின்
எந்த ஒரு பகுதியானாலும் சரியே!
கூர்ந்து
பாருங்கள்; கேளுங்கள்,
உணருங்கள்,
சுவையுங்கள்,
நுகருங்கள்!
விரைவிலேயே
நடனமாடுபவரையும் கண்டுகொள்ளலாம்!
No comments:
Post a Comment