எங்கள்
நாய் ஒரு நாள் மரத்தின் கிளையை
கவனிப்பதை பார்த்தேன்.
காதுகள்
விறைத்து வால் விறைப்பாக
ஆடிக்கொண்டு..... அது
கிளை மீது உட்கார்ந்திருந்த
குரங்கை கவனிக்கிறது என்று
அறிந்தேன். அதற்கு
அப்போது குரங்கைத்தவிர வேறு
எதுவும் கவனத்தில் இல்லை.
முழுக்க
முழுக்க குரங்கே அதன் மனதில்
நிறைந்து இருந்தது.
அடுத்த நாள்
பற்றிய கவலை அதற்கில்லை.
அது
அப்போது இருந்த நிலை த்யானம்.
அது போன்ற
த்யான நிலையில் அதை நான் அது
வரை பார்க்கவே இல்லை.
த்யானத்துக்கு
மற்றதைப்போலவே சுலபமான ஒரு
வழி முழுக்க முழுக்க இந்த
கணத்தில் இருப்பதுதான்.
கடந்த காலம்
குறித்தோ வரும் காலம் குறித்தோ
ஒரு சிந்தனையும் இல்லாமல்....
விளையாடும்
ஒரு பூனைக்குட்டியை பாப்பது
போல....
No comments:
Post a Comment